விண்வெளியிலிருந்து வரும் சிறுகோள்கள் அவ்வப்போது பூமியைக் கடந்து செல்வது வழக்கம். இவ்வாறு கடந்து செல்லும் சிறுகோள்களைக் காண்பதற்கே விண்வெளி ஆர்வலர்கள் பலர் காத்துக்கொண்டிருப்பர். அந்த வகையில் வருகின்ற மார்ச் 21ம் தேதி பெரிய சிறுகோள் ஒன்று பூமியைக் கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது. இது அளவில் பெரியதாகவும், அபாயகரமானதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மார்ச் 21, 2021 அன்று பூமியை தாண்டி ஒரு 'அபாயகரமான சிறுகோள்' செல்ல உள்ளது. இதுவரை நமது கிரகத்தை கடந்த பல சிறுகோள்களைப் போலல்லாமல், இது 2021ம் ஆண்டில் பூமியைக் கடந்து செல்லும் மிகப்பெரிய மற்றும் வேகமான சிறுகோள் என்பதால் இது ஆபத்தானதாக கருதப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (NASA) வின் படி, இந்த சிறுகோள் 2001 FO32-இன் சுற்றுப்பாதை நன்கு அறியப்பட்டதால் பூமியில் மோதி பாதிப்பை ஏற்படுத்தாது என கூறப்பட்டுள்ளது. இந்த சிறுகோள் வினாடிக்கு 21 மைல் (34.4 கி.மீ) வேகத்தில் நகரும் என்றும் சிறுகோள் 2001 FO32 இன் விட்டம் 1 கிலோமீட்டர் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு குறிப்பிட்ட தினத்தன்று இரவு 9:33IST மணிக்கு (11:03 am ET) நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மிக அருகில் என்பது, சுமார் 1.3 மில்லியன் மைல்கள் (2,016,351 கி.மீ) அல்லது 5 லூனார் டிஸ்டன்சில் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
FO32 இன் வேகம் நம்பமுடியாத அளவிற்கு இருக்குமாம். மேலும் இது 97% சிறுகோள்களை விட பெரியதாக இருந்தாலும், அது கண்ணுக்குத் தெரியாது. வானியலாளர்கள் மற்றும் விண்வெளி ஆர்வலர்கள் 8'' அல்லது பெரிய தொலைநோக்கிகளைப் பயன்படுத்திதான் அதன் இயக்கத்தைக் கவனிக்க முடியும். இந்த முறை, கடந்த 200 ஆண்டுகளில் இப்போதுதான் இந்த சிறுகோள் நம் பூமிக்கு மிக அருகில் வர உள்ளது. மார்ச் 21 அன்று தோன்றிய பின்னர், இந்தச் சிறுகோள் அடுத்ததாக 31 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 22, 2052 அன்று பூமியைக் கடந்து செல்லும் என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள பார்வையாளர்களுக்கு சிறுகோள் 2001 FO32 ஐப் பார்ப்பதற்கான சிறப்பு வழிமுறைகளையும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த விண்கல் தெற்கு வானத்தில் ஒப்பீட்டளவில் குறைவாகத் தெரியும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த சிறுகோளை வடக்கு வானத்தில் அதாவது ஸ்கார்பியஸ் மற்றும் சாகிட்டாரிஸ் (Scorpius and Sagittarius) ஆகியவற்றின் தெற்கு விண்மீன்களின் வழியாக பூமிக்கு அருகில் வரும்போது அதை பார்வையாளர்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | உங்கள் துணையிடம் எந்த சூழ்நிலையிலும் சொல்லக்கூடாத ரகசியங்கள்!
தெற்கு அரைக்கோளத்திலும் குறைந்த அட்சரேகைகளிலும் உள்ள பார்வையாளர்கள் சிறுகோள் 2001 FO32 ஐ சூப்பராக பார்க்க முடியும். குறிப்பிட்ட இடங்களில் அதற்கான ஏற்பாடுகளும் இருக்கும். மார்ச் 23, 2001 அன்று Lincoln Near-Earth Asteroid Research (LINEAR) முதன் முதலில் சிறுகோள் 2001 FO32-ஐ கண்டுபிடித்தது. இது சூரியனைச் சுற்றி ஒவ்வொரு 810 நாட்களுக்கும் அதன் சுற்றுப்பாதையில் வளம் வருவதாக அப்போதே கண்டறியப்பட்டது.
லிங்கன் ஆய்வகத்தின் பரிசோதனை சோதனை தளத்தில் (Lincoln Laboratory's Experimental Test Site (ETS)) இருக்கும் கருவிகளைப் பயன்படுத்தி நியூ மெக்ஸிகோவின் சோகோரோவில் இது கண்டுபிடிக்கப்பட்டது."இப்போது நாம் காணும் வால்நட்சத்திரங்கள் எல்லாம் முன்னர் பெரிய கோள்களான வியாழன், சனி, யுரேனஸ் நெப்டியூன் போன்றவற்றிலிருந்து சிதறிய துகள்களே என்றும் தற்போது நாம் காணும் சிறுகோள்கள் எல்லாம் செவ்வாய், புதன், பூமி, வெள்ளி ஆகிய உள் கிரகங்களின் சேர்க்கையின்போது ஏற்பட்ட துகள்களே" என்று பிர்மிஹ்ங்காம் லைவ் விண்வெளி நிறுவனம் முன்னர் தெரிவித்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.