ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

உங்கள் லேப்டாப்பில் வைபை இணைப்பை பெறுவதில் சிக்கலா? - இவற்றை சரிபாருங்கள்!

உங்கள் லேப்டாப்பில் வைபை இணைப்பை பெறுவதில் சிக்கலா? - இவற்றை சரிபாருங்கள்!

உங்கள் லேப்டாப்பில் வைபை இணைப்பை பெறுவதில் சிக்கலா

உங்கள் லேப்டாப்பில் வைபை இணைப்பை பெறுவதில் சிக்கலா

நீங்கள் நெட்வொர்க் அடாப்டர் ஆப்ஷனை உங்கள் லேப்டாப்பில் பெறவில்லை என்றால், வலது கிளிக் செய்து, Device Manager என்பதை தேர்வு செய்து ‘View’ என்பதை கிளிக் செய்யவும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

தற்போதைய காலத்தில் இணைய வசதி இல்லையென்றால் நேரமே போகாது. குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில்ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வீட்டில் இருந்தே வேலை செய்வது அதிகரித்துள்ளது. வீட்டுச் சூழலில் இருந்து வேலை செய்ய முயற்சிக்கும்போது அல்லது நெட்ஃபிக்ஸ்-ல் உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சியை உங்கள் லேப்டாப்பில் பார்த்து கொண்டிருக்கும் போது இணைய இணைப்பில் பிரச்னை ஏற்பட்டால் அது தலைவலியாக மாறும். சில நேரம் வைஃபை நெட்வொர்க் உங்கள் லேப்டாப்பில் காண்பிக்கும், ஆனால் அதனை இணைத்து பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கும் . இந்த சிக்கலை சரி செய்யும் முறைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

உங்கள் லேப்டாப்பை ரீஸ்டார்ட் செய்யுங்கள் :

சில நேரங்களில் உங்கள் லேப்டாப்பை ரீஸ்டார்ட் செய்வது நெட்ஒர்க் பிரச்சனைகளை சரிசெய்ய உதவும். உங்கள் லேப்டாப்பில் ஈத்தர்நெட் கேபிள் செருகப்பட்டிருந்தால், அதனை அவிழ்த்து மீண்டும் இணைக்கவும். இந்த ட்ரிக் வேலை செய்யவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம், இன்னும் சில வழிகளும் உள்ளது.

உங்கள் இணைப்பை தேடுங்கள் :

நீங்கள் நெட்வொர்க் அடாப்டர் ஆப்ஷனை உங்கள் லேப்டாப்பில் பெறவில்லை என்றால், வலது கிளிக் செய்து, Device Manager என்பதை தேர்வு செய்து ‘View’ என்பதை கிளிக் செய்யவும். பின்னர் ‘Show Hidden Devices என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்கள் வைபை பெயர் அதில் தோன்றினால் கனெக்ட் என்பதை கிளிக் செய்து இணைக்கவும். இல்லையென்றால் ‘Scan for hardware changes.’ என்பதை கிளிக் செய்து பார்க்கவும். இப்போது திரையில் தோன்றும் நெட்ஒர்க்கை இணைக்கவும்.

Also Read : மோட்டோரோலா எட்ஜ் 2021 ஸ்மார்ட்போன் அறிமுகம்! - ஸ்னாப்டிராகன் 778 ஜி, 108 MP டிரிபிள் கேமரா வசதிகள்

மடிக்கணினியின் பேட்டரியை அகற்றவும்

குறிப்பு: உங்களிடம் அகற்றக்கூடிய பேட்டரி இல்லையென்றால் இந்த வழியை தவிர்க்கவும். மடிக்கணினியின் பேட்டரியை அகற்றுவதும் இதுபோன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவும். உங்கள் கணினியிலிருந்து பேட்டரியை நீக்கியவுடன், மதர்போர்டு உங்கள் கணினியின் செட்டிங்கை மீண்டும் இணைக்கும் என்பதால் இந்த பிரச்னை சரியாக வாய்ப்புகள் உள்ளது.

VPN மற்றும் Antivirus ஆகியவற்றை ஆப் செய்யவும் :

VPN மற்றும் Antivirus ஆகியவற்றை ஆப் செய்ய முயற்சிக்கவும். பின்னர் உங்கள் பிசி/லேப்டாப்பை ரீஸ்டார்ட் செய்து பார்க்கவும்.

நெட்வொர்க் அடாப்டர் முறை :

விண்டோஸின் சமீபத்திய பதிப்புகள் troubleshooters எளிய முறைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு Start > Settings or use the Windows key + I என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் Update & Security > Troubleshoot > Additional Troubleshooters என்ற பக்கத்தில் சென்று, ‘Find and fix other problems’ என்பதன் கீழ், Network Adapter’ என்பதை தேர்வு செய்து ‘Run the troubleshooter.’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்கள் வைபை-யை இணைக்க முடியும்.

நெட்வொர்க் ரீசெட் டூல் :

Troubleshooter உங்களுக்கு சரியான தீர்வை தரவில்லை என்றால், நெட்ஒர்க் செட்டிங்கை ரீஸ்டார்ட் செய்யவும். இதற்கு முதலில் Settings & Network என்ற பகுதிக்கு சென்று, ‘Network reset’ என்பதை கிளிக் செய்து ‘Reset Now' என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது உங்கள் லேப்டாப் நெட்ஒர்க் ரீஸ்டார்ட் ஆவதால் வைபை இணைப்பு சிக்கலின்றி கிடைக்கும்.

Also Read : கூகுளில் இருக்கும் ஈஸியான 3 செட்டிங்ஸ் - தெரியாமல் இருந்தால் தெரிஞ்சுக்கோங்க!

வின்சாக் ( Winsock) செட்டிங்கை ரீஸ்டார்ட் செய்யவும் :

OS அதன் நெட்வொர்க் சேவைகளை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை Winsock தீர்மானிக்கிறது. வின்சாக் நெட்வொர்க் அடாப்டர் காணாமல் போக வழிவகுக்கும். எனவே இதனை மீட்டமைக்க வேண்டும். இதற்கு Start > Command Prompt > Run as administration என்பதை கிளிக் செய்து, இப்போது தோன்றும் திரையில் 'netsh Winsock என தட்டச்சு செய்து Enter-ஐ அழுத்தவும். பின்னர் இதனை உங்கள் லேப்டாப்பில் சேவ் செய்து ரீஸ்டார்ட் செய்யவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vijay R
First published:

Tags: Laptop, Wifi