உங்கள் லேப்டாப் பேட்டரி வழக்கத்தை விட வேகமாக குறைகிறதா? அதை சரிசெய்யும் வழிகள்!

லேப்டாப்

உங்கள் பேட்டரி ஆரோக்கியத்தை சோதிக்க விண்டோஸ் 10-ல் ரகசிய கருவி ஒன்று இருக்கிறது. இதை ரகசிய கருவி என்று அழைப்பதற்கு காரணம், இது ஸ்டார்ட் மெனு அல்லது செட்டிங்ஸ்-ல் இருக்காது.

  • Share this:
லேப்டாப்பில் பேட்டரி ஆயுள் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது நாள் முழுவதும் எந்த இடையூறும் இல்லாமல் உங்கள் வேலையை தொடர உதவுகிறது. இருப்பினும், மற்ற எல்லா மின்னணு தொழில்நுட்பங்களைப் போலவே, பேட்டரிகளும் காலப்போக்கில் சிதைந்து தங்களது ஆயுளை இறந்துவிடுகின்றன. சில சமயங்களில் லேப்டாப்பை பயன்படுத்தும் போது மிக விரைவாக பேட்டரி டவுன் ஆகிவிடும். அப்படியானால், நீங்கள் உங்கள் லேப்டாப்பின் பேட்டரியை மற்ற வேண்டும் என்று அர்த்தம். அந்த வகையில், உங்கள் பேட்டரி இயங்கும் போது அதன் ஆரோக்கியத்தை எவ்வாறு சரிபார்க்கலாம்?

உங்கள் பேட்டரி ஆரோக்கியத்தை சோதிக்க விண்டோஸ் 10-ல் ரகசிய கருவி ஒன்று இருக்கிறது. இதை ரகசிய கருவி என்று அழைப்பதற்கு காரணம், இது ஸ்டார்ட் மெனு அல்லது செட்டிங்ஸ்-ல் இருக்காது. எனவே, அதை எப்படி அணுகுவது?. இந்தக் கருவியைப் பயன்படுத்தி உங்கள் பேட்டரி ஆரோக்கியத்தை எவ்வாறு சரிபார்க்கலாம்? என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1. உங்கள் கணினியில் கமாண்ட் பிராம்ப்ட் திரையை ஓபன் செய்ய வேண்டும். அதற்கு விண்டோஸ் சர்ச்சில் “Cmd” அல்லது “Command Prompt” என டைப் செய்து சர்ச் செய்யவும். அல்லது Start Menu-வில் தேடவும். கமாண்ட் பிராம்ப்ட் ஓபன் ஆனதும் விண்டோ பைல் பாத் "C: \" என்று இருக்கும்.

2. இப்போது பின்வரும் டெக்ஸ்ட்டை அப்படியே டைப் செய்ய வேண்டும். அ தாவது "powercfg /batteryreport" என டைப் செய்து பிறகு Enter பட்டனை அழுத்தவும். இப்போது, ​​"பேட்டரி ஆயுள் அறிக்கை சேமிக்கப்பட்டது" (Battery life report saved) என்ற வாக்கியத்துடன் ஒரு பைல் பாத் கொண்ட செய்தி தோன்றும். இந்த பைல் பாத் பேட்டரி அறிக்கை இருக்கும் இருப்பிடமாகும். வழக்கமாக, இது உங்கள் யூசர் போல்டர்களில் சேமிக்கப்படும் மற்றும் அதன் பாத் C:\Users\[Your_User_Name]\battery-report.html என்று இருக்கும்.

3. பைல் எக்ஸ்ப்ளோரரில் இருந்து அந்த பைல்களை நீங்கள் திறக்கலாம் அல்லது பைல் பாத்தை காப்பி செய்து பைல் எக்ஸ்ப்ளோரரின் முகவரி பட்டியில் உள்ளிட்டு Enter ஐ அழுத்த வேண்டும். இல்லையெனில், நீங்கள் அந்த லிங்கை Chrome இன் முகவரி பட்டியில் உள்ளிடலாம்.

Also read... எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கும் Realme GT 5G ! மலிவு விலையில் விற்பனைக்கு வரும் என தகவல்

மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி, ​​உங்கள் சாதனத்தில் நிறுவப்பட்ட பேட்டரிகளுக்கான முழு பேட்டரி அறிக்கையை பார்க்கலாம். அதில் "வடிவமைப்பு திறன்" (Design Capacity) புலத்தைக் கவனிக்க வேண்டும். இது உங்கள் பேட்டரி புதியதாக இருக்கும் போது எவ்வளவு சக்தியை வழங்க முடியும் என்பதைக் குறிக்கிறது. அதேபோல உங்கள் பேட்டரி வழங்கக்கூடிய அதிகபட்ச சக்தியைப் பற்றி அறிய "முழு சார்ஜ் திறன்" (Full Charge Capacity) என்ற ஆப்ஷனில் பார்க்க வேண்டும். இதையடுத்து மேற்கண்ட இரண்டு மதிப்புகளையும் ஒப்பிட்டு, உங்கள் பேட்டரியின் சீரழிவு மற்றும் ஆரோக்கியத்தை நீங்கள் மதிப்பிடலாம்.

பேட்டரி மற்றும் ஏசி (சார்ஜர்) ஆகியவற்றில் உங்கள் சாதனப் பயன்பாட்டு முறைகள் பற்றிய தகவல்களும் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும். அதேபோல லேப்டாப் பயன்பாட்டின் தரவு வரைபடங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது உங்கள் பேட்டரி எவ்வளவு விரைவாக குறைகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.
Published by:Vinothini Aandisamy
First published: