ரத்த தானம் என்பது உலக அளவில் தினமும் லட்சக்கணக்கானோர் செய்தாலும் ஒரு சில நேரங்களில் ரத்தத் தட்டுப்பாடு என்பது காணப்படும். பொதுவாக இருக்கும் A,B ,O ,AB போன்ற பொதுவான ரத்த வகைகள் எளிதாக கிடைத்துவிடும். ஆனால் ஒரு சில ரத்த வகைகள் மிகவும் அரிதானவை.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 'பாம்பே' ரத்த வகை உலகத்திலேயே மிகக்குறைந்த எண்ணிக்கையில் உள்ள மக்களுக்கே உள்ளது. இப்படிப்பட்ட மக்களுக்கு ரத்தம் தேவை பட்டாள் அதை உலகின் கடை கோடி மூலையில் இருந்து பெறுவது என்பது சிரமம்.இரத்தம் துல்லியமாக பொருந்தவில்லை என்றால், உடல் அதை நிராகரிக்கத் தொடங்குகிறது. ஆரோக்கியத்திற்கு அது சவால் விடும்.
அதே போல் 'சிக்கில் செல் அனீமியா' போன்ற நோய் கொண்டவர்கள் அடிக்கடி புதிய ரத்தத்தை ஏற்ற வேண்டி இருக்கும் அவர்களுக்கு தேவையான ரத்தம் சரியான நேரத்தில் கிடைப்பது என்பது சிக்கலான காரியம். ரத்தம் கிடைக்காவிடில் இந்த நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.அவர்களுக்கு ஒரு தீர்வு தரும் நோக்கில் ஒரு கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கழிவறையைவிட இங்குதான் பாக்டீரியா அதிகம் : செல்போன் பயனர்களுக்கு ‘ஷாக்’ தந்த ஆய்வு முடிவு!
பிரிஸ்டல், கேம்பிரிட்ஜ், லண்டன் மற்றும் NHS இரத்தம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு ஒன்று நுரையீரலில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் சிவப்பு இரத்த அணுக்களை ஆய்வகத்தில் உருவாக்க முடிவெடுத்தனர்.
ஆரோக்கியமான மனிதர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் இருந்து ஒரு சிவப்பு இரத்த அணுவாக மாறும் திறன் கொண்ட நெகிழ்வான ஸ்டெம் செல்களை சேகரித்தனர். இந்த ஸ்டெம் செல்களை ஆய்வகங்களில் அதிக எண்ணிக்கையில் வளர வைத்து பின்னர் இரத்த சிவப்பணுக்களாக மாற்றப்பட்டன.
இந்த செயல்முறை நடைபெற சுமார் மூன்று வாரங்கள் எடுக்கும். அதில் சுமார் அரை மில்லியன் ஸ்டெம் செல்கள் வளர்ந்து 50 பில்லியன் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது. இவை வடிகட்டப்பட்டு சுமார் செழிப்பான இரத்த சிவப்பணுக்களாக மாற்றியமைக்க வளர்ச்சியின் சரியான கட்டத்தில் உள்ள 15 பில்லியன் செல்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: இத கேட்டீங்களா..! தண்ணீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்து உருவாக்கிய சோனி இயர்போன்கள்
ஆரோக்கியமான 10 நபர்களுக்கு 4 மாத இடைவெளியில் 5-10 மில்லி ஆய்வக ரத்தத்தையும் இயற்கை ரத்தத்தையும் செலுத்தி உடலில் ஏற்படும் மாற்றத்தை ஆய்வு செய்ய இருக்கின்றனர். மனித சோதனை வெற்றி அடைந்தால் மருத்துவ உலகில் இது ஒரு பெரிய மைல்கல் வெற்றியாக இருக்கும்.
சாதாரணமாக 120 நாட்கள் செயல்பாட்டில் இருக்கும் சிவப்பு ரத்த செல்கள் உடல் முழுவதும் ஆக்சிஜனை எடுத்து செல்கிறது.பொதுவாக ரத்த தானம் கொடுக்கும்போது பழைய மற்றும் புதிய சிவப்பு ரத்த செல்கள் இருக்கும் ரத்தம் தான் கொடுக்கப்படும்.
ஆனால் புதிய ஆய்வக ரத்தத்தில் முழுக்க முழுக்க புதிய சிவப்பு ரத்த அணுக்களே இருக்கும். இது தயாரிப்பதற்கான செலவு அதிகம் என்றாலும் மக்களுக்கு பெரிய உதவிகளை செய்யும் என்று நம்பப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Blood, Blood Donation, Research