218 கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்டிய ட்விட்டருக்கு போட்டி சமூக வலைதளமான கூ

கூ

ட்விட்டருக்கு போட்டியான சமூக வலைதளமான கூ 218 கோடி ரூபாய் முதலீட்டத்தைத் திரட்டியுள்ளது.

 • Share this:
  ட்விட்டர் சமூக வலைதளதத்துக்குப் போட்டியான கூ 218 கோடி ரூபாய் மூதலீட்டை ஈர்த்துள்ளது. ஏற்கெனவே முதலீடு செய்த முதலீட்டாளர்களுடன் இணைந்து டைகர் குளோபல் நிறுவனம் இந்த முதலீட்டைத் திரட்டியுள்ளது. ஏற்கெனவே, அக்செல் பார்ட்னர்ஸ், கலாரி கேப்பிட்டல், ப்ளூம் வென்ட்சர்ஸ், ட்ரீம் இன்குபேட்டர் ஆகிய நிறுவனங்கள் முதலீட்டாளர்களாக இருக்கின்றனர் என்று கூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

  சமூக வலைதளங்கள், ஓடிடி ஆகிய டிஜிட்டல் தளங்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. அதன்படி சர்ச்சைக்குரிய பதிவுகளை 36 மணி நேரங்களுக்குள் நீக்கிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அவதூறு செய்தியை முதலில் பரப்பும் நபரை கண்டறிந்து, அவரை பற்றிய தகவல்களை நீதிமன்றங்கள் மற்றும் அரசுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இவ்விதிகளை பின்பற்ற மூன்று மாத அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது.

  அந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில், புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் இந்த நேரத்தில் கூ சமூகவலைதளம் தன்னை வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

  இதுதொடர்பாக கூ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தனியுரிமைக் கொள்கைகள் மற்றும் புதிய விதிமுறைகளில் நாங்கள் உடன்படுகிறோம். கூ நிறுவனம் 218 கோடி ரூபாய் நிதியை திரட்டியுள்ளது. அந்தப் பணத்தின் மூலம், கூ சமூக வலைதளத்தை இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் ஏற்றமுறையில் மென்பொருளை வலுப்படுத்துவோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: