Home /News /technology /

Google search-ல் நீங்கள் விரும்பும் தேடல் முடிவுகளை சரியாகப் பெற உதவும் டிப்ஸ் & ட்ரிக்ஸ்!

Google search-ல் நீங்கள் விரும்பும் தேடல் முடிவுகளை சரியாகப் பெற உதவும் டிப்ஸ் & ட்ரிக்ஸ்!

கூகுள்

கூகுள்

உங்கள் கூகுள் தேடல் முயற்சியை மிகவும் வெற்றிகரமான மற்றும் வசதியான முறையில் மேற்கொள்ள சில எளி வழிமுறைகளை அறிய விரும்புகிறீர்களா?

நாம் அனைவரும் கூகுள் தேடலை (Google search) தினமும் பல நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறோம். மாணவர்கள் முதல் தொழில் வல்லுநர்கள் வரை அனைவரும் Google search-ஐ பொழுதுபோக்கு, கல்வி அல்லது வேறு எந்த டேட்டாவையும் தேடுவது உள்ளிட்ட பல காரணங்களுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் சரியான தேடல் முடிவுகளை (search results) பெறுவதில் பலர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதில் நீங்களும் ஒருவரா.?

உங்கள் கூகுள் தேடல் முயற்சியை மிகவும் வெற்றிகரமான மற்றும் வசதியான முறையில் மேற்கொள்ள சில எளி வழிமுறைகளை அறிய விரும்புகிறீர்களா..? தொடர்ந்து படியுங்கள்.. இன்டர்நெட்டில் நீங்கள் தேடுவதை எளிதாக வசதியாகத் தேட மற்றும் கண்டறிய கண்டுபிடிக்கவும் உதவும் சில வழிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இந்த வழிகள் உங்கள் தேடல் திறனை ((search efficiency) அதிகப்படுத்தும். திறமையான கூகுள் தேடலுக்கு உதவும் இந்த எளிய மற்றும் எளிதான ட்ரிக்ஸ்களை செய்து பாருங்கள்..

குறிப்பிட்ட சொற்றொடர் (Search a Specific Phrase):

நீங்கள் ஒரு குறிப்பிட்ட சொற்றொடரை தேட விரும்பினால், "" இரட்டை மேற்கோள்களை பயன்படுத்துவது உங்களுக்கு உதவும். சொற்றொடரில் பட்டியலிடப்பட்டுள்ள அதே சொற்களின் வரிசையில் இரட்டை மேற்கோள் சொற்றொடர்களை மட்டுமே Google பட்டியலிடுகிறது. ஹைப்பர்-ஸ்பெசிஃபிக் தேடல் ரிசல்ட்களை (hyper-specific search results) நீங்கள் விரும்பினால் இந்த அம்சம் சிறப்பாகச் செயல்படும்.

நட்சத்திர குறியீடுகளை பயன்படுத்துங்கள் (Use asterisks ):

தெரியாத வார்த்தைகளை தேடும் போது * (asterisks) பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இரண்டாம் உலக போரின் முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி சர் வின்ஸ்டன் லியோனார்ட் ஸ்பென்சர்-தேடல்சிலைக் கண்டுபிடிக்க, தேடல் பாக்ஸில் “வின்ஸ்டன் * தேடல்சில்” என்று டைப் செய்யலாம்.

வாய்ஸ் மூலம் தேடல் (Search by Voice):

கூகுள் தேடல்சில் டைப் செய்ய உங்களுக்கு சோர்வாக இருந்தால், உங்கள் தேடல் முயற்சியை நிறைவேற்ற Google voice search-ஐ பயன்படுத்தலாம். நீங்கள் குரோம் பிரவுசர் மூலம் பிரவுசிங் செய்யும் போது அல்லது Android அல்லது iOS-ல் Google ஆப்ஸை பயன்படுத்தினால், மேல் வலது மூலையில் இருக்கும் மைக்ரோஃபோன் ஐகானை கிளிக் செய்து, நீங்கள் தேட விரும்புவதை குரல் மூலம் கூறலாம். உங்களிடமிருந்து வாய்ஸை பெற்ற பிறகு தேடல் ரிசல்ட்கள் காட்டப்படும்.

பிரத்யேக தேடல் டேப்-ஐ பயன்படுத்தவும் (Use dedicated search tab):

கூகுள் தேடல் பேஜில் இருக்கும் dedicated search tab யூஸனர்கள் தங்கள் தேடல் கேட்டகிரியை குறிப்பிட அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு இமேஜை தேட விரும்பினால்,Image search tab-ஐ கிளிக் செய்யவும் அல்லது செய்திகளை பிரவுஸ் செய்ய விரும்பினால் News tab-ஐ கிளிக் செய்யவும். வீடியோக்கள், ஷாப்பிங் போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.

சொற்களை தவிர்க்க ஹைபன்களை பயன்படுத்தவும் (Use hyphens to omit words):

தேடல் பாரில் உள்ள வார்த்தைகளில் - (ஹைபன்) பயன்படுத்தினால், அந்த வார்த்தைகள் தேடல் முடிவுகளில் இருந்து தவிர்க்கப்படும். எடுத்துக்காட்டாக, நீங்கள் "Buy Windows Laptop-Dell” என்று டைப் செய்தால், அது 'டெல்' லேப்டாப்ககளை தவிர்த்து விட்டு ரிசல்ட்களை காண்பிக்கும்.

Also read... ஜிமெயில், யூடியூப் மற்றும் ஜிபே-யில் சிக்கலா? கூகுள் சப்போர்ட்டை தொடர்பு கொள்வது எப்படி.?

குறிப்பிட்ட சைட்களை தேடுங்கள் (Search specific sites):

தேவையில்லாத ரிசல்ட்களை தவிர்க்க குறிப்பிட்ட சைட்களை மட்டுமே தேடலாம். சைட்டின் பெயரை எழுதி டொமைன் பெயருக்கு அடுத்ததாக ஒரு செமிகோலன் வைக்கவும். எடுத்துக்காட்டாக, “site: xyz.com android 11” என்று டைப் செய்து தேடல் செய்தல் குறிப்பிட்ட சைட்டில் இருந்து ‘android 11’ என்ற தேடல் டெர்மிற்கான முடிவுகளை மட்டுமே பட்டியலிடும்.

சோஷியல் மீடியா ஹேண்டில்ஸ்களை கண்டறிய @-ஐ பயன்படுத்தலாம்..

விராட் கோலியின் இன்ஸ்டா பேஜை நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால், அதை ViratKohli @ instagram என டைப் செய்யவும். இப்படி செய்வது விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டா பேஜ் மற்றும் அவரது ஃபேன் பேஜின் முடிவுகளை காண்பிக்கும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Google

அடுத்த செய்தி