ட்ரோன் மூலம் எளிதாகிய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை...! மருத்துவத்தில் முதல் முயற்சி

இன்றைய காலகட்டத்திற்கு ட்ரோன் தொழில்நுட்பம், அதன் செயல்பாடுகள் மருத்துவத் துறைக்குத் தேவை.

news18
Updated: May 3, 2019, 12:23 PM IST
ட்ரோன் மூலம் எளிதாகிய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை...! மருத்துவத்தில் முதல் முயற்சி
சிறுநீரகத்தை எடுத்துச் சென்ற ட்ரோன்
news18
Updated: May 3, 2019, 12:23 PM IST
அமெரிக்காவில் மேரி லேண்ட் மெடிக்கல் மையத்தின் உதவுடன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிறுநீரகத்தை ட்ரோன் மூலம் எடுத்துச் சென்ற முயற்சி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி முதல் முறை என்பதால் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

எட்டு வருடங்களாக டயாலிஸிஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்ட 44 வயது பெண்ணிற்கு சிறுநீரகம் பழுதடைந்ததால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

அதி நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள ட்ரோன் இந்த சிறுநீரகத்தை தூக்கிக்கொண்டு 400 அடி உயரத்தில் 5 கிலோ மீட்டர் தூரம் பறந்துள்ளது. அதுவும் மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்தைவிட பத்து நிமிடங்களுக்கு முன்கூட்டியே மருத்துவமனையை அடைந்துள்ளது.


இது குறித்து மருத்துவர் ஜோசப் ஸ்காலியா பேசுகையில் “ இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிகழ்ந்துள்ளது. ட்ரோன் மூலம் சிறுநீரகம் கொண்டுவரப்பட்டது அறுவை சிகிச்சையைக்கு பேருதவியாக இருந்தது. சரியான நேரத்தில் வேலை முடிந்ததால் நோயாளியும் ஆரோக்கியமாக இருக்கிறார் என்றுக் கூறியுள்ளார்.

அடுத்தமுறை 30 அல்லது 100 மைல் தூரத்திற்கு ட்ரோனைப் பறக்கவிட்டு சோதனை நிகழ்த்தப்போவதாக ஜோசப் கூறியுள்ளார். ”இது மாற்று அறுவைச் சிகிச்சைக்கு எதிரான துரம்தான். இருப்பினும் இன்றைய காலகட்டத்திற்கு ட்ரோன் தொழில்நுட்பத்தின் முக்கியதுவம், அதன் செயல்பாடுகள் உலகறியச் செய்ய வேண்டும். அதை இதுபோன்ற மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் போக்குவரத்து போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம். ட்ரோன் பயன்படுத்துவது நேரம் மட்டுமன்றி பணச் செலவும் குறையும்.

இப்படி 30 , 100 மைல்களுக்கு பறக்கவிட்டால் மருத்துவ துறையில் உள்ளவர்களுக்கு நம்பிக்கைப் பிறக்கும்” என்று AFP பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

Loading...

இதையும் படிக்க :

அதிரடி ஆஃபரில் கேட்ஜெட்ஸ்... தொடங்கியது ஃப்ளிப்கார்ட் சேல்!

ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அதிரடி ஆஃபர் வழங்கும் அமேசான் ’சம்மர் சேல்’!
First published: May 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...