ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ர்யுகு சிறுகோளில் உயிர்களுக்கான சாத்தியக்கூறு! -ஜாக்ஸா ஆய்வு

ர்யுகு சிறுகோளில் உயிர்களுக்கான சாத்தியக்கூறு! -ஜாக்ஸா ஆய்வு

ர்யுகு சிறுகோளில் உயிர்க்கூறு

ர்யுகு சிறுகோளில் உயிர்க்கூறு

LIFE IN RYUGU: ர்யுகு மாதிரியில் 20 வகையான அமினோ அமிலங்கள் இருந்ததை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பூமியைத் தவிர்த்து வேறு எந்த கோளில் வாழமுடியும் என்ற தேடல் கடந்த சில நூற்றாண்டுகளாக பந்தயம் போல் நடந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாடும் தங்கள் செயற்கைகோள்களை எந்த கோளுக்கு அனுப்பலாம், எந்த விண்கல்லில் என்ன இருக்கிறது என்று தேடி ஓடிக்கொண்டே இருக்கின்றது. சூரியன் முதல் புளூட்டோ வரை உள்ள அணைத்து கோள்களுக்கும் செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. அது போக விண்கற்கள், சிறுகோள்கள், மற்ற விண்பொருள்களையும் ஆய்வு செய்து வருகிறது.

நம் பூமியை சுற்றி இருக்கும் விண்பொருட்களை NEAR EARTH OBJECTS என்று சொல்வார்கள். அந்த மாதிரியான ஒரு சிறுகோளுக்கு Ryugu என்று பெயர். பல சிறிய பாறைகளால் ஆனது. மேலும் இதன் விரைவு சுழற்சியின் காரணமாக இந்த சிறுகோளின் மேற்பரப்பு கரடுமுரடாக உருவமற்று இல்லாமல் கிட்டத்தட்ட கோள வடிவத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ர்யுகு என்பது ஒரு கார்பன் பொருளால் நிறைந்த , C-வகை சிறுகோள் ஆகும். அவற்றில் பெரும்பாலானவை தோராயமாக 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரியனையும் சூரிய குடும்பத்தின் கிரகங்களையும் உருவாக்கிய அதே நெபுலாவிலிருந்து உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. அவ்வளவு பழமையான தாதுக்கள் தரம் மாறாமல் அப்படியே இருப்பதாக கண்டறிந்துள்ளனர். அது போக இதில் ஆதிக்கம் சூரிய ஒளி படாத தன்மையை கண்டறிந்துள்ளனர். இதற்கு முந்தைய மாதிரி பகுப்பாய்வின்படி, ர்யுகு சிறுகோளில் நீரும் இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஜப்பான் விண்வெளி ஆய்வு முகமை எனப்படும் ஜாக்ஸா(JAXA) நிறுவனம் 2014 ஆம் ஆண்டு ர்யுகு விற்கு ஹயபுசா 2 என்ற செயற்கைக்கோளை அனுப்பியது. அந்த செயற்கோளோடு சென்ற கருவி அந்த சிறுகோளில் இருந்து மாதிரிகளை 2019 ஆம் ஆண்டு சேகரித்தது. 2020 ஆம் ஆண்டு ஹயபுசா 2 பூமிக்குத் திரும்பி வந்தது.

ர்யுகு சிறுகோளில் இருந்து எடுத்து வரப்பட்ட 5.4 கிராம் மேற்பரப்புப் பொருளை ஹிரோஷிமா பல்கலைக்கழகம் மற்றும் டோக்கியோ பல்கலைக்கழகம் உட்பட ஜப்பான் நாடு முழுவதும் உள்ள பல ஆராய்ச்சி நிறுவனங்களில் , ஜப்பான் விண்வெளி ஆய்வு முகமை  பகுப்பாய்வு செய்து வருகிறது.

கடந்த வெள்ளியன்று, கொண்டுவந்த மாதிரிகளில் 20 வகையான அமினோ அமிலங்கள் இருந்ததை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார். அமினோ அமிலங்கள் அனைத்து உயிரினங்களுக்கும் முக்கிய உயிர்க் கூறுகளாக இருக்கின்றன. மேலும் உயிர்கள் எவ்வாறு உருவானது என்பதை மனிதர்கள் நன்கு புரிந்துகொள்ள உதவும் முக்கியமான தடயங்களை இதனால் வழங்க முடியும்.

அமினோ அமிலங்கள் உயிர்களில் இருக்கும் புரதங்களை உருவாக்குவதில் கருவியாக இருக்கின்றன. மேலும் எந்த வகையான வாழ்க்கையும் செயல்படுவதற்கு  உண்மையிலேயே இன்றியமையாதவை இவை. ஆனால், அமினோ அமிலங்கள் பூமிக்கு எப்படி வந்தன என்பது விஞ்ஞானிகளுக்கு இப்போது வரை உண்மையில் தெரியாது.

வானில் திடீரென தோன்றிய பச்சை ஒளி.. ஏலியனா, விண்கல்லா என அச்சப்பட்ட மக்கள்

விண்கற்கள் தான் அதை கிரகத்திற்கு கொண்டு வந்தது என்று ஒரு கோட்பாடும்  நமது கிரகத்தின் நிலத்தில் இயற்கையிலேயே இணைக்கப்பட்டுள்ளது என்ற கூற்றும் உள்ளது.

யோகோஹாமா நேஷனல் யுனிவர்சிட்டியின் வானியற்பியல் பேராசிரியர் கென்சி கோபயாஷி ஒரு அறிக்கையில், வேற்று கிரகத்தில் அமினோ அமிலங்கள் இருப்பது பூமிக்கு வெளியே உள்ள உயிர்களையும் , அதற்கான சாத்தியக் கூறுகளையும் குறிக்கிறது என்று கூறினார். இதனால் இந்த சிறுகோளில் உயிரினங்கள் வாழ வாய்ப்பு அமையலாம் என்றார்.

அமெரிக்காவைச் சேர்ந்த சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வு, இந்த பொருள் "மற்ற இயற்கை மாதிரிகளை விட சூரியனின் ஒளிக்கோளத்தை மிகவும் நெருக்கமாக ஒத்த ஒரு இரசாயன கலவையைக் கொண்டுள்ளது" என்று கூறியயுள்ளது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Asteroid, Japan, Research, Space