காலாவதி ஆகும் வாட்ஸ்அப் கணக்குகள்... இன்டெர்நெட் முடக்கத்தால் காஷ்மீர் அவதி!

வாட்ஸ்அப் நிறுவனம் காஷ்மீர் மக்களுக்காக சலுகை காட்ட வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்து வருகின்றன.

காலாவதி ஆகும் வாட்ஸ்அப் கணக்குகள்... இன்டெர்நெட் முடக்கத்தால் காஷ்மீர் அவதி!
வாட்ஸ் அப்
  • News18
  • Last Updated: December 5, 2019, 7:50 PM IST
  • Share this:
கடந்த நான்கு மாதங்களாக காஷ்மீர் பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் உலகத்தோடு தொடர்பற்ற நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர்.

காஷ்மீர் பகுதிகளில் கடந்த 120 நாட்களாக இணைய சேவை முடங்கியுள்ளது. இதனால் காஷ்மீர்வாசிகளின் வாட்ஸ்அப் கணக்குகள் காலாவதி ஆகி வருகின்றன. வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து காஷ்மீரைச் சார்ந்தோர் மாயமாகி வருவதால் அம்மக்கள் உலகத்தோடு தொடர்பற்ற நிலையில் உள்ளனர்.

வாட்ஸ்அப் செயலியின் விதிமுறைப்படி 120 நாட்கள் பயன்பாட்டில் இல்லாத கணக்குகள் தானாகவே காலாவதி ஆகிவிடும். ஆனால், காஷ்மீர் மக்களுள் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் காஷ்மீரைச் சார்ந்தோரின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் இப்பிரச்னை குறித்து புகார் செய்து வருகின்றனர்.

வாட்ஸ்அப் நிறுவனம் காஷ்மீர் மக்களுக்காக சலுகை காட்ட வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்து வருகின்றன. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீரில் இணைய முடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும் பார்க்க: உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியைக் காப்பாற்ற வாட்ஸ்அப் வழங்கும் புது அப்டேட்!

 

First published: December 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading