சனி கோளின் வளையமும், வியாழன் கோளின் பிரகாசத்தையும் ஒரு சேர காண வேண்டுமா..?

சனி கோளின் வளையமும், வியாழன் கோளின் பிரகாசத்தையும் ஒரு சேர காண வேண்டுமா..?

மாதிரி படம்

இந்தியாவில், மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை இந்த காட்சி தெரியும். இந்த நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கலாம்.

 • Share this:
  1623ம் ஆண்டுக்குப் பிறகு வியாழனும்(Jupiter) சனியும் (Saturn) ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக காட்சியளிக்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது. சுமார் 397 வருடங்களுக்கு முன்பு விண்ணுலக அற்புதம் கடைசியாகக் காணப்பட்ட இந்த நிகழ்வு, இனி மீண்டும் 2080ல் நடக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தெரியப்போகும் இந்த காட்சி நம் கண்களுக்கு ஒரு விருந்தாகும். மெதுவாக நகரும் இரண்டு கிரகங்களும் "கிரேட் கன்ஜெக்சன்" (Great Conjunction) என்று சொல்லக்கூடிய அளவிற்கு 0.1 டிகிரி இடைவெளியில் இருக்கும்.

  எந்த நேரத்தில் இந்த நிகழ்வு தோன்றும்:

  இந்த அதிசிய நிகழ்வு இன்று சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு மாலை 6.30 முதல் 7.30 மணி வரை நம் கண்களுக்கு தெரியும். இந்த நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கலாம். இந்த நிகழ்வின் மிக தெளிவான சிறந்த காட்சியைப் பெற வேண்டும் என நீங்கள் நினைக்கும் பட்சத்தில், உங்களிடம் ஒரு தொலைநோக்கி இருந்தால் சிறப்பாக இருக்கும். அப்படியில்லையென்றால் தொலைநோக்கிகள் அல்லது சிறிய தொலைநோக்கி இருக்கும் இடத்திற்கு சென்று இதன் நிகழ்வை காணலாம். தொலைநோக்கிகளை பயன்படுத்தி பார்க்கும் போதும் இரு கிரங்கங்களும் தெளிவாக தெரிவதோடு, வியாழனைச் சுற்றி வரும் நான்கு நிலவுகளையும் உங்களால் காண முடியும்.

  கிரேட் கன்ஜெக்சன் நிகழ்வை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:

  1. நாசாவின் கூற்றுப்படி, இவை இரண்டும் ஒன்றாக காட்சியளிக்கும் நிகழ்வை மக்கள் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடியதாக இருக்கும்.

  2. தொலைநோக்கி மூலம் ஒருவர் பார்த்தால், வியாழனின் நான்கு பெரிய நிலவுகள் கிரகத்தைச் சுற்றி வருவது தெரியும்.

  3. இது தென்மேற்கு வானில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு தெரியும்.

  4. அதன்படி இந்தியாவில், மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை இந்த காட்சி தெரியும்.  5. சனி, வியாழன் கோள்களின் காட்சியை காண டெல்லியில் உள்ள நேரு கோளரங்கம் https://nehruplanetarium.org/ என்ற இணையதளத்தில் முன்பதிவையும் திறந்துள்ளது. கொரோனா வைரஸ் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து, கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக டிசம்பர் 20 முதல் ஸ்கைவாட்சைத் தொடங்கியுள்ளது. மேலும் டிசம்பர் 22 வரை இந்த கோளரங்கம் மக்களின் பார்வைக்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, வெப்காஸ்டிங் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  6. இதையடுத்து, பெங்களூரின் ஜவஹர்லால் நேரு கோளரங்கம் வானிலை அனுமதித்தால் யூடியூப் மற்றும் பேஸ்புக் சேனலில் அல்லது https://www.taralaya.org/ என்ற இணையதளத்தில் இந்த அரிய காட்சி நேரலை ஸ்ட்ரீம் செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  7. இந்த நிகழ்வை கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்றும் பெரும்பாலான மக்கள் அழைக்கின்றனர். ஏனெனில் கிரகங்கள் தனித்தனியாக இருந்தாலும், ஒரு பெரிய நட்சத்திரமாக காட்சியளிக்கும் என்பதால், அவை கிறிஸ்துமஸ் நட்சத்திரம் அல்லது இயேசு கிறிஸ்து பிறந்தபோது கிழக்கு வானத்தில் தோன்றிய பெத்லகேமின் நட்சத்திரம் என்று நம்பப்படுகிறது.  8. இந்த நிகழ்வு டிசம்பர் மாத சங்கீதத்துடன் ஒத்துப்போகிறது. முக்கியமாக இரு கோள்களின் சங்கமத்தால் இன்று வடக்கு அரைக்கோளத்தில் ஆண்டின் மிகக் குறுகிய நாளாகவும் மற்றும் தெற்கில் மிக நீளமான நாளாகவும் இருக்கும்.

  9. நாசாவின் கூற்றுப்படி, சனி சற்று மங்கலாக இருக்கும். ஏனெனில் இது நமது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகத்திற்கு மேலே இடதுபுறம் தோன்றும். மேலும் இந்த நிலைப்பாடு டிசம்பர் 21 க்குப் பிறகு மாறும் என தெரிவித்துள்ளனர்.

  வாஷிங்டன் ஹென்றி த்ரூப்பில் உள்ள தேசிய ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (NASA) தலைமையகத்தில் உள்ள கிரக அறிவியல் பிரிவில் பணியாற்றி வரும் ஒரு வானியலாளர் கூறியதாவது, “இரு கோள்களும் ஒன்றாக இணைந்து காட்சியளிக்கும் தேதி, சூரியனைச் சுற்றியுள்ள பாதைகளில் வியாழன், சனி மற்றும் பூமியின் நிலைகளால் தீர்மானிக்கப்படுகிறது. அதேபோல சங்கிராந்தி பூமியின் அச்சின் சாய்வால் தீர்மானிக்கப்படுகிறது. சங்கிராந்தி ஆண்டின் மிக நீண்ட இரவு, எனவே இந்த அரிய மற்றும் தற்செயலான நிகழ்வு மக்களுக்கு வெளியே சென்று சூரிய மண்டலத்தைப் பார்க்க ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும்” என கூறியுள்ளார்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: