வியாழனுக்கு நாசா அனுப்பிய ஜூனோ செயற்கைகோள் தன் 41வது வியாழனுடனான நெருங்கிய சுற்றுவட்டப் பயணத்தை மேற்கொண்டு படத்தை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
வியாழன்:
நம் சூரிய குடும்பத்தின் பெரிய கோள் வியாழன். அளவில் பெரியதாகவும் அடர்த்தி குறைவாகவும் இருக்கும். சூரியனில் இருந்து தொலைவில் உள்ளதால் வியாழன் மீதான சூரியனின் ஈர்ப்பு விசை பூமியை விடக் குறைவாக இருக்கும். பெரும்பாலும் மணற்புயல்கள் சூழ்ந்து காணப்படும்.
நம் பூமியின் வளிமண்டலத்தைவிட பன்மடங்கு அடர்த்தி கொண்டதாக இருக்கும். மேகங்கள் எல்லாம் தாதுத் துகள்களை ஏந்தியதாக இருக்கும். வியாழன் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 10 மணி நேரம் ஆகும். சூரியனைச் சுற்றி வர 12 வருடங்கள் ஆகும். வியாழனின் தரை வெப்பம் -145c ஆக இருக்கும். சூரியனை விட்டு தூரமாக இருப்பதால் குளிர்ந்து காணப்படும்.
ஜூனோ:
கிரேக்க கடவுள் ஜூப்பிட்டரின் மனைவியான ஜூனோ என்ற பெயரில் ஜூப்பிட்டருக்கு ஒரு செயற்கைக்கோளை 2011 இல் நாசா அனுப்பியது. 2016 ஆம் ஆண்டு ஜூப்பிட்டரின் சுற்றுவட்ட பாதையை அடைந்தது.
வியாழனின் தோற்றம் , வளர்ச்சி, அதன் வளிமண்டலம் பற்றி ஆராய்வதே இதன் முதன்மையான நோக்கமாகும்.மேலும் கூடுதலாக வியாழனின் காந்தவிசை, தண்ணீர், அம்மோனியம் போன்ற தாதுக்களின் இருப்புநிலை, நிலத்தின் ஸ்திரத்தன்மை, கோளின் உட்கூறு பண்புகள் குறித்தும் இந்த செயற்கைகோள் ஆய்வு செய்யும்.வியாழனைச் சுற்றி மணிக்கு சுமார் 2,10,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது.
ஜூனோவின் ஒரு பகுதியாக புறஊதாக்கதிர் ஸ்பெக்ட்ரோமீட்டர் கொண்டு இயங்கும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமரா மூலம் அவ்வப்போது வியாழனின் புகைப்படங்கள் பூமிக்கு அனுப்பப்படுகிறது.
Google அசிஸ்டண்ட்டில் வரவுள்ள புதிய அப்டேட் என்ன தெரியுமா.?
சுழற்சி முறையில் அவ்வப்போது ஜூனோ வியாழனை நெருங்கி வட்டமிட்டு படங்களை எடுக்கும்.
2020 ஏப்ரல் மாதத்தில் வியாழன் மீது ஒரு விண்கல் விழுந்து பள்ளம் ஏற்பட்டது. அதன் பின்னர் ஜூனோவின் வியாழனுடனான நெருங்கிய சுற்றுப்பாதையில் செல்லும்போது அந்த விண்கல்லை படம் எடுத்து அனுப்பியது. அதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அந்த விண்கல் சுமார் 250 முதல் 5000 கிலோ எடை கொண்டதாக இருக்கலாம் என்று கணக்கிட்டனர்.
2021 இல் வியாழனை நெருங்கும்போது அதன் விட்டத்தை அளவிட்டது. ஜூனோ கணக்கீட்டின் படி வியாழனின் விட்டம் சுமார் 1,40,000கிமீ.
அப்படி சமீபத்தில் ஏப்ரல் 9,2022 அன்று ஜூனோ வியாழனின் நெருக்கமான பாதையில் செல்லும்போது ஜூனோகேம் (Junocam ) கருவியால் ஏராளமான படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. ஜூனோ அனுப்பிய RAW படங்களைத் தொகுத்து ஒரு குறுகிய ஒளிப்படம் ( gif) ஆக நாசா (NASA ) வெளியிட்டுள்ளது.
இதன்மூலம், வியாழனின் பலவகை நிறங்கள் கொண்ட நில அமைப்புகளையும், வளிமண்டல மாற்றங்களையும், வியாழனின் எழிலையும் கண்டு ரசிக்க முடிகிறது.இதன் பயன்பாட்டின் தேவை இருப்பதனால் ஜூனோவின் ஆயுள் காலம் செப்டெம்பர் 2025 வரை நீட்டிக்க நாசா முடிவுசெய்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.