ஜூஸ் ஜாக்கிங் என அழைக்கப்படும் இந்த வகை ஹேக்கிங்ஸ் டேட்டா கேபிள் மூலம் சாத்தியப்படுவாதாக தெரிவிக்கின்றனர். பொதுவாக நாம் சார்ஜர் போட பயன்படுத்தும் கேபிள்கள் மறுபக்கம் சார்ஜர்கள் எனப்படும் மின் உயிரிகளுடன் இணைத்து இருக்க வேண்டும் .
ஒருவேளை அவ்வாறு இல்லாமல் , வேறு ஒரு விஷமி ஒருவர் தந்திரமாக இணைப்பை இன்னொரு கணினி அல்லது அது போன்ற வேறு ஒரு இயந்திரத்தின் யூஎஸ்பி இணைப்பில் சொருகி இருக்கும் பட்சத்தில், உங்கள் செல்பேசியில் தேவையில்லாத மென்பொருட்களை புகுத்த முடியும். அதன்மூலம் உங்களை கண்காணிப்பது மட்டுமின்றி , உங்கள் வங்கி கணக்கின் கடவுச்சொல் போன்ற முக்கியமான தகவல்களை திருட முடியும் .
இதனை பற்றிய முழு விவரங்களை விளக்கும் வீடியோ👇
View this post on Instagram
ஜூஸ் ஜாக்கிங் என்றால் என்ன?
இது நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு மிகவும் சாமர்த்தியமான ஒரு நூதன திருட்டு முறை. நீங்கள் வெளியிடங்களுக்கும் அல்லது வெளியூர்களுக்கும் செல்லும்போது ரயில் நிலையங்களிலோ அல்லது வேறு ஏதேனும் பொது இடங்களிலோ உங்கள் மொபைலை சார்ஜ் செய்வதற்காக அங்குள்ள சார்ஜிங் போர்ட்டுகளை பயன்படுத்தி இருப்பீர்கள். அது போன்ற இடங்களில் இந்த நூதன திருட்டு கும்பல் தங்களின் கைவரிசையை காட்டுகின்றனர். நீங்கள் மொபைல் அல்லது லேப்டாப் ஆகியவற்றை புது இடங்களில் சார்ஜ் செய்யும்போது அந்த சார்ஜ் போர்ட்டில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் டிவைஸை ஹேக் செய்வது மற்றும் உங்கள் தகவல்களை திருடுவதற்கான வைரஸ்களையும் அந்த சார்ஜிங் போர்ட்டுகள் மூலம் உங்களிடம் டிவைசுக்குள் செலுத்தி விடுகின்றனர். எனவே முடிந்தவரை பொது இடங்களில் நம் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை சார்ஜ் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Online Frauds, RBI, Scam