Home /News /technology /

வேலை தேடுவோர் கவனத்திற்கு..வாட்ஸ்அப்பில் இப்படியொரு மெசேஜ் வந்தால் உஷார்! 

வேலை தேடுவோர் கவனத்திற்கு..வாட்ஸ்அப்பில் இப்படியொரு மெசேஜ் வந்தால் உஷார்! 

scam

scam

WhatsApp Scam | வாட்ஸ்அப் மூலமாக மற்றொரு மோசடி தீயாய் பரவி வருகிறது. குறிப்பாக இந்த மோசடிகள் வேலை தேடும் நபர்களை குறிவைத்து நடத்தப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  வாட்ஸ்அப் மூலமாக நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக மெசேஜ் அனுப்பி மோசடி நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து காவல்துறையினரும் விழிப்புடன் செயல்படும் படி மக்களை எச்சரித்திருந்தனர். இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் மூலமாக மற்றொரு மோசடி தீயாய் பரவி வருகிறது. இந்த மோசடிகள் வேலை தேடும் நபர்களை குறிவைத்து நடத்தப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  இந்தியாவில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கும் இளம் தலைமுறையினர் லட்சக்கணக்கில் உள்ளனர். வேலை தேடி அலையும் இளம் பெண்கள், இளைஞர்களிடம் எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் மெசெஜ் மூலமாக போலியான வேலை வாய்ப்புகள் மற்றும் மோசடிகள் அரங்கேறி வருவது தெரியவந்துள்ளது.

  வேலை வாய்ப்புத்தளமான Hirect இன் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் வேலை தேடுபவர்களில் சுமார் 56% பேர் மோசடிகள் மற்றும் போலி வேலை வாய்ப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 20 முதல் 29 வயது வரையிலான இளம் தலைமுறையினரே மோசடி கும்பலின் இலக்கு என்றும், அதிக சம்பளத்துடன் வேலை தருவதாக உறுதியளித்து பண மோசடியில் ஈடுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வேலைக்கு டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் எனக்கூறி இளைஞர்களிடம் இருந்து பணம் பறிக்கும் செயல்கள் நடைபெற்று வருகிறது.

  Read More : பாதுகாப்பை பலப்படுத்திய வாட்ஸ்அப்... இனி இதை செய்ய முடியாது.!


  சில போலியான ஆன்லைன் தளங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்து ஆயிரங்களில் சம்பாதிக்கலாம் என ஆசைகாட்டி, வேலைக்கான ஊதியம் தராமல் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. அதேபோல் போலி ஏஜென்சிகள் சில, நல்ல சம்பளம் பெறக்கூடிய வேலைக்கு குறைந்த செலவில் பயிற்சி அளிப்பதாக கூறி மோசடியில் ஈடுபடுகின்றன.

  சமீப காலமாக, வாட்ஸ்அப்பில் அல்லது எஸ்எம்எஸ் மூலமாக குறுஞ்செய்திகளை அனுப்புவதன் மூலம் மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் இதுபோன்ற செய்திகளைப் பெறலாம்: “நீங்கள் எங்கள் நேர்காணலில் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள், ஒரு நாள் ஊதியம் ரூ 8000. மேலும் விவரங்களை அறிந்து கொள்ள தொடர்பு கொள்ளவும்: http://wa.me/9191XXXXXX SSBO." என்பது தற்போது மோசடி கும்பல் பயன்படுத்தி வரும் நியூ டெக்னிக் ஆகும்.

  இந்த லிங்கை வேலை தேடும் நபர் கிளிக் செய்யும் பட்சத்தில் ஃபிஷிங் வலைத்தளத்திற்குத் திருப்பிவிடப்பட்டு ஆன்லைன் மோசடியில் சிக்க வாய்ப்புள்ளது.

  மோசடியின் வகைகள்:

  முன்கூட்டியே பணம் கேட்பது:

  சிறியது முதல் பெரியது வரை எந்த நிறுவனமாக இருந்தாலும் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர், அந்த வேலைக்காக HR துறைக்கு எவ்வித பணமும் செலுத்த வேண்டியது கிடையாது. ஆனால் மோசடி செய்பவர்கள் பதிவு கட்டணம், ஏஜென்சி கட்டணம், விண்ணப்பக் கட்டணம், பயிற்சிக் கட்டணம், ஆஃபர் லெட்டர் கட்டணம் என பல பெயரைச் சொல்லி வேலை தேடுவோரிடம் இருந்து முன்கூட்டியே பணம் பெற திட்டமிடலாம். ஆன்லைன் மூலமாக பணத்தை செலுத்தியதும், ஆஃபர் லெட்டரை பெற்றுக்கொள்ளலாம் என ஆசையை தூண்டுவார்கள் என்பதால், வேலை தேடும் நபர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.

  சம்பளத்திலிருந்து வேலைக்கான கமிஷன்:

  வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் நிறுவனங்கள் சில, பணி நியமன ஆணை ஆகியவற்றை எல்லாம் முன்கூட்டியே வழங்கிவிடும். நீங்களும் மாதம் முழுவதும் அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்காக உழைத்திருப்பீர்கள், ஆனால் மாதக் கடைசியில் சம்பளம் பெறும் தான் பேரதிர்ச்சி காத்திருக்கும். அதாவது முதல் மாத சம்பளம் வேண்டுமென்றால் குறிப்பிட்ட தொகையை ஏஜென்சி கட்டணமாக செலுத்த வேண்டும் என நிர்பந்திக்கப்படுவீர்கள். மேலும் ஏஜென்சிக்கு மாதந்தோறும் 10 சதவீதம் வரை கமிஷன் செலுத்தும் நிலைக்கும் இளைஞர்கள் தள்ளப்படலாம்.

  பிரமிட் மார்க்கெட்டிங் அல்லது தரவு திருட்டு:

  சில நேரங்களில் வேலை வாய்ப்பு தரும் ஏஜென்சிக்கு நீங்கள் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும், பின்னர் புதிய விண்ணப்பதாரர்களைக் கொண்டுவருவதற்கு உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட கமிஷன் வழங்கப்படும். பிரமிட் மார்க்கெட்டிங் முறை போல், உங்களுக்கு கீழ் சேரும் ஒவ்வொரு நபருக்கும் கமிஷன் வழங்கப்படும் என ஆசையை தூண்டுவார்கள். இல்லையெல் வேலை தேடிக்கொண்டிருக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்களின் தொடர்பு எண்களை பகிர்வதற்கும் பணம் தருவதாக கூறி, மோசடியில் ஈடுபடுவார்கள்.
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Online Frauds, Technology, WhatsApp

  அடுத்த செய்தி