ஜியோ டிவி செயலிக்கு விருது!

ஜியோ டிவி செயலிக்கு விருது!
  • Share this:
ஜியோ டிவி செயலிக்கு ஐபிடிவி (IPTV) புத்தாக்க விருது வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலக தகவல் தொடர்பு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு 25 பிரிவுகளில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதில், இணையவழி தொலைக்காட்சி சேவை வழங்குவதில் புத்தாக்கத்துக்கான விருது, வளரும் சந்தையில் சிறந்த நிறுவனம், சமூக பங்களிப்பு விருது, புத்தாக்க நிறுவனம் ஆகிய நான்கு விருதுகளுக்கு ரிலையன்ஸ் ஜியோ பரிந்துரை செய்யப்பட்டது.


இதில், ஐபிடிவி புத்தாக்க விருதை ஜியோ டிவி செயலி வென்றுள்ளது. ஜியோ டிவி-யில் விரிவான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதாக நடுவர்கள் குறிப்பிட்டனர். மேலும், கோடிக்கணக்கான மக்களுக்கு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்தனர்.
First published: November 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading