ஜியோ மியூசிக் இனி ஜியோ சாவ்ன்...! அதிரடி சலுகையுடன் புதிய மாற்றம்

ஜியோ சாவ்ன் அப்-ஐ பிளே ஸ்டோர், ஜியோ அப் ஸ்டோர் உள்ளிட்ட அனைத்து app மூலமும் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

Web Desk | news18
Updated: December 6, 2018, 12:33 PM IST
ஜியோ மியூசிக் இனி ஜியோ சாவ்ன்...! அதிரடி சலுகையுடன் புதிய மாற்றம்
ஜியோ சாவ்ன் அப்-ஐ பிளே ஸ்டோர், ஜியோ அப் ஸ்டோர் உள்ளிட்ட அனைத்து app மூலமும் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.
Web Desk | news18
Updated: December 6, 2018, 12:33 PM IST
இந்தியாவின் முன்னனி மீயூசிக் அப் ஆகக் கருதப்படும் ஜியோ மியூசிக் மற்றும் சாவ்ன் இணைந்து தற்போது ’ஜியோ சாவ்ன்’ ஆக அறிமுகமாகியுள்ளது. இதையொட்டி வாடிக்கையாளர்களுக்கு 90 நாள்களுக்கு இலவச சந்தா அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாடல் தளமான சாவ்ன் (Saavn) ரிலையன்ஸ் ஜியோ உடன் இணைக்கப்பட்டு ஜியோ சாவ்ன் (JioSaavn) என அறிமுகமாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இன்று முதல் இந்த புதிய மாற்றம் அமலாகியுள்ளது.

ஜியோ சாவ்ன் அப்-ஐ பிளே ஸ்டோர், ஜியோ அப் ஸ்டோர் உள்ளிட்ட அனைத்து app மூலமும் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

252 மில்லியன் பயனாளர்கள் உடன் இந்தியாவின் முக்கிய மியூசிக் அப் ஆக உள்ளது ஜியோ மியூசிக். தற்போது தெற்காசியாவின் பெரும் மியூசிக் அப் உடன் இணைவதன் மூலம் பல புதிய அம்சங்கள் பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் 90 நாள்கள் இலவச சந்தா வழங்கப்பட உள்ளது.

“இந்தப் புதிய ஒருங்கிணைந்த music streaming app இந்தியாவின் டிஜிட்டல் சேவையில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும். ஜியோ மியூசிக் மற்றும் Saavn இணைந்த JioSaavn இந்தியாவின் மிகப்பெரிய music streaming அமைப்பாகும்” என ரிலையன்ஸ் ஜியோ நிறுவன இயக்குநர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

சாவ்ன் துணை நிறுவனர்களான ரிஷி மல்ஹோத்ரா, பரம்தீப் சிங் மற்றும் வினோத் பட் ஆகியோர் தொடர்ந்து நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் தரத்துக்காகவும் JioSaavn உடன் பயணிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: பாலியல் டார்கெட் - பதறும் இளம் நடிகைகள்
Loading...
First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்