JIO BUY ONE GET ONE OFFER: ஜியோ அசத்தல் ஆஃபர்! ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம்.. மிஸ் பண்ணாதீங்க.

ஜியோபோன்

  • Share this:
4ஜி போன்களில் கையடக்கமான ஜியோபோன் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன் வாங்கினால் தான் 4ஜி வேக இணைய சேவை பெற முடியும், வீடியோ பார்க்க முடியும் என்பது மட்டுமல்ல, கையடக்கமான பீச்சர் போனிலும், வீடியோ கால், தொலைக்காட்சி சேனல்கள், பேஸ்புக், யூடியூப், வாட்ஸ் அப் என்று அத்தனை அம்சங்களையும் ஜியோ வழங்குகிறது.

இந்தியாவில் குறைந்த வேகத்தில் 2 ஜி சேவையை பயன்படுத்திக் கொண்டிருக்கும் மக்கள், 4ஜி சேவையை பெற, யாருமே தராத சலுகை விலைகளில் ஜியோபோன், ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகிறது ரிலையன்ஸ் ஜியோ. தற்போது இந்த கொரோனா மற்றும் ஊரடங்கு காலங்களில் ரீசார்ஜ் செய்ய முடியாத வாடிக்கையாளர்கள் கவலையின்றி இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளொன்றுக்கு 10 நிமிடங்கள் வீதம், மாதம் 300 நிமிடங்கள் எந்த கட்டணமும் இன்றி, இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

மேலும், ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசமாக வழங்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, ₹39 முதல் ₹185 வரை உள்ள ரீசார்ஜ் பிளான்களில் ஏதேனும் ஒன்றை வாங்கினால், அதே பிளான் இலவசமாக பெறலாம்.

அதாவது ஒருமாதத்திற்கான ரீசார்ஜ் கட்டணத்தில் இரண்டு மாதத்திற்கு பயன்பெறலாம்.

₹39 ரீசார்ஜ் பிளான்

ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக பிளான் இது. 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற இலவச அழைப்புகள் மேற்கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எம்.பி இணையம் பயன்படுத்தலாம். ஜியோ டிவி, ஜியோ மூவி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களையும் பயன்படுத்தலாம்.

₹69 ரீசார்ஜ் பிளான்

14 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற இலவச அழைப்புகள் மேற்கொள்ளலாம். நாளொன்றுக்கு 500 எம்.பி இணையம் பயன்படுத்தலாம். ஜியோ டிவி, ஜியோ மூவி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களையும் பயன்படுத்தலாம்.

₹75 ரீசார்ஜ் பிளான்

28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற இலவச அழைப்புகள் மேற்கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எம்.பி இணையம் பயன்படுத்தலாம். ஜியோ டிவி, ஜியோ மூவி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களையும் பயன்படுத்தலாம். கூடுதலாக 200 எம்பி இணையம் வழங்கப்படுகிறது.

₹125 ரீசார்ஜ் பிளான்

28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற இலவச அழைப்புகள் மேற்கொள்ளலாம். நாளொன்றுக்கு 500 எம்.பி இணையம் பயன்படுத்தலாம். ஜியோ டிவி, ஜியோ மூவி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களையும் பயன்படுத்தலாம்.

₹155 ரீசார்ஜ் பிளான்

28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற இலவச அழைப்புகள் மேற்கொள்ளலாம். நாளொன்றுக்கு 1 ஜி.பி. இணையம் பயன்படுத்தலாம். ஜியோ டிவி, ஜியோ மூவி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களையும் பயன்படுத்தலாம்.

₹185 ரீசார்ஜ் பிளான்

28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற இலவச அழைப்புகள் மேற்கொள்ளலாம். நாளொன்றுக்கு 2 ஜி.பி. இணையம் பயன்படுத்தலாம். ஜியோ டிவி, ஜியோ மூவி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களையும் பயன்படுத்தலாம்.

₹749 ரீசார்ஜ் பிளான்

336 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற இலவச அழைப்புகள் மேற்கொள்ளலாம். 28 நாட்களுக்கு 2 ஜி.பி. வீதம் இணையம் பயன்படுத்தலாம். ஜியோ டிவி, ஜியோ மூவி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களையும் பயன்படுத்தலாம்.

மேற்குறிப்பிட்ட பிளான்களை ஏதேனும் ஒன்றை ரீசார்ஜ் செய்தால், அதே கால அளவுக்கு இரட்டிப்பு பலன்களை பெறலாம்.

இதுமட்டுமல்லாது, ₹1999 விலைக்கு ஜியோ போன் மற்றும் 2 ஆண்டுகளுக்கு 48 ஜிபி டேட்டா உடன் வரம்பற்ற அழைப்புகளுக்கான வரம்பற்ற பிளான் கிடைக்கிறது.

₹1499 விலைக்கு ஜியோபோன் மற்றும் ஒரு ஆண்டுக்கு 24ஜிபி டேட்டா உடன் வரம்பற்ற அழைப்புகளுக்கான வரம்பற்ற பிளான் கிடைக்கிறது.

ஏற்கெனவே ஜியோபோன் வைத்துள்ளவர்கள் ₹749 கட்டணத்திற்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு ஆண்டுக்கு 24ஜிபி டேட்டா உடன் வரம்பற்ற அழைப்புகளுக்கான பிளான் கிடைக்கிறது.
Published by:Yuvaraj V
First published: