• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • JioPhone Next Android Phone... விலை, சிறப்பம்சங்கள் என்ன?

JioPhone Next Android Phone... விலை, சிறப்பம்சங்கள் என்ன?

ஜியோபோன் நெக்ஸ்ட்

ஜியோபோன் நெக்ஸ்ட்

கூகுள் பிளே ஸ்டோர், கேமரா, கூகுள் அசிஸ்டெண்ட், அனைத்து எழுத்துக்களையும் மொழிமாற்றம் செய்யும் திறன் என அனைத்து வசதிகளையும் ஜியோபோன் நெக்ஸ்ட் உள்ளடக்கி இருக்கும்.

  • Share this:
    ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி செப்டம்பர் 10ம் தேதி சந்தைக்கு வரவுள்ளது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள ஜியோபோன் நெக்ஸ்டின்  விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (RIL) 44 வது ஆண்டு பொதுக் கூட்டம் (AGM) கடந்த ஜூன் 24ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மோர்ட்போன்  குறித்த அறிவிப்பை ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டார். விநாயகர் சதுர்த்தியன்று இந்த செல்போன் விற்பனைக்கு வரும் என்றும் முகேஷ் அம்பானி கூறியிருந்தார்.

    மலிவான விலையில் அனைத்து வசதிகளும்  உள்ளடக்கிய 4ஜி திறன் கொண்ட ஸ்மார்ட் போனான ஜியோபோன் நெக்ஸ்ட், ஜியோ மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கிய ஆண்ட்ராய்ட் பதிப்பில் இயங்கும்.  இணையத்தை முதன்முறையாக பயன்படுத்தும் பயனாளர்களை  இலக்காக வைத்து  ஜியோபோன் நெக்ஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

    ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டத்தில் பங்குதாரர்களிடையே உரையாற்றிய கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை,  கூகுள் பிளே ஸ்டோர், கேமரா, கூகுள் அசிஸ்டெண்ட், அனைத்து எழுத்துக்களையும் மொழிமாற்றம் செய்யும் திறன் என அனைத்து வசதிகளையும் ஜியோபோன் நெக்ஸ்ட் கொண்டிருக்கும் என்று கூறியிருந்தார்.

    வானிலை அறிக்கை, கிரிக்கெட் ஸ்கோர் ஆகியவற்றை அறிந்துகொள்வதை தாண்டி, ஜியோ செயலியில் உள்ள பாடல்களை இசைக்கும்படியோ,  மை ஜியோ செயலி மூலம் தனது வங்கி கணக்கில் எவ்வளவு உள்ளது என்பதை காண்பிக்கும்படியோ குகூள் அசிஸ்டெண்டுக்கு பயனர்கள் கட்டளையிட்டு தெரிந்துகொள்ள முடியும்.

    இந்த போனில் கேமரா மென்பொருட்களும் இருக்கும்.  பட்ஜெட் போன்களில் கிடைக்காத வேகமான மற்றும் உயர்தர கேமரா” அனுபவத்தை ஜியோபோன் நெக்ஸ்டில் கூகுள்  உறுதியளிக்கிறது. இந்த போனில் உள்ள கேமரா மூலம் உயர்தர போட்டோக்களை எடுக்க முடியும். பிற பட்ஜெட் போன்களில் இந்த வசதியை நாம் எளிதல் பார்க்க முடியாது.  ஜியோபோன் நெக்ஸ்டிற்கான சமீபத்திய ஆண்ட்ராய்டு வெளியீடுகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளையும் கூகிள் உறுதியளிக்கிறது. எனினும்  எந்த அண்ட்ராய்ட்  பதிப்பில் இந்த போன் இயக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    தற்போது ஸ்மார்ட் போன்களின் விலை என்பது 5000 ரூபாய்க்கு மேலாகவே உள்ளது.  ஜியோ சிம் அறிமுகப்பட்ட பின்னர், டேட்டாக்களுக்கான விலை என்பது மிகவும் குறைந்துபோனது. அதுபோல், பிற நிறுவனங்கள் தங்கள் போனில் விலையை குறைக்கும் வகையில் ஜியோபோன் நெக்ஸ்ட்டின் விலை இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.  சாதாரண போன்களை பயன்படுத்திவரும் பல லட்சம் பேரை ஸ்மார்ட்போன் பயனர்களாக ஜியோபோன் நெக்ஸ்ட் மாற்றக்கூடும்.

    இந்த ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் விலை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: