• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • JioPhone Next : ரூ. 6,499 விலையில் அட்டகாசமான மொபைல்... விற்பனை இன்று தொடக்கம்

JioPhone Next : ரூ. 6,499 விலையில் அட்டகாசமான மொபைல்... விற்பனை இன்று தொடக்கம்

Jio phone next

Jio phone next

ஜியோபோன் நெக்ஸ்ட்டில் இடம்பெற்றுள்ள சாஃப்ட்வேர்கள், ஆட்டோ அப்கிரேட் ஆகக்கூடியவை. கூகுள் நிறுவனம் இந்த ஃபோனை வடிவமைத்திருப்பதால் அதன் சிறந்த ஆப்ஷன்களான ரீட் அலோட், கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட் உள்ளிட்டவையும் இதில் இடம்பெற்றுள்ளன.

  • Share this:
    தகவல்கள் தொழில்நுட்ப துறையில் தரமான சேவை மற்றும் ஏராளமான சலுகைகளை வழங்கி வருவதன் மூலம், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது ஜியோ நிறுவனம். இதன் புதிய வெளியீடாக ஜியோபோன் நெக்ஸ்ட் (JioPhone Next) உள்ளது. ஸ்மார்ட் போன் யூசர்களை குறிவைத்து, ரூ. 6,499-க்கு போன் சந்தைக்கு வந்துள்ள இந்தபோன், இன்று முதல் விற்பனையாகிறது. இதனை முன்பணம் ரூ. 1,999 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று ஜியோ அறிவித்துள்ளது.

    இந்நிலையில் வாடிக்கையாளர்கள் கடைக்குச் சென்று போன்களை வாங்குவதற்கு முன்பாக, ஜியோவின் இணைய தளம் அல்லது வாட்ஸ்ஆப் எண்ணில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 7018270182 என்ற எண்ணின் வாட்ஸ்ஆப்பில் Hi என்று மெசேஜ் அனுப்பினால், நமது விவரங்கள் பதிவாகி விடும். நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரம் சில்லறை வர்த்தக கடைகளில், ஜியோ போன் நெக்ஸ்ட் விற்பனைக்கு வந்துள்ளது.

    5.45 இன்ச் HD டிஸ்ப்ளே கொண்ட இந்த போனின் மூலம், 720•1440 பிக்சல் அளவுடைய இமேஜ் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். கொரில்லா க்ளாஸ் 3 பாதுகாப்புடன் கிடைப்பதால், டிஸ்ப்ளே ஸ்க்ராட்சிங் ஆகுவதற்கான வாய்ப்பு குறைவு. 13 மெகாபிக்சல் பின்பக்க கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவுடன் ஜியோபோன் நெக்ஸ்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    2 ஜி.பி. ரேம் மெமரி மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்டர்னல் ஸ்டோரேஜை 512 ஜி.பி.வரையில் அதிகரிக்க முடியும். 3,500mAh பேட்டரி, 3.5mm ஆடியோ ஜேக், ப்ளூடூத் v4.1, வை-பை, டுயல் நானோ சிம்கள் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்கள்.

    ஜியோபோன் நெக்ஸ்ட்டில் இடம்பெற்றுள்ள சாஃப்ட்வேர்கள், ஆட்டோ அப்கிரேட் ஆகக்கூடியவை. கூகுள் நிறுவனம் இந்த ஃபோனை வடிவமைத்திருப்பதால் அதன் சிறந்த ஆப்ஷன்களான ரீட் அலோட், கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட் உள்ளிட்டவையும் இதில் இடம்பெற்றுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: