• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • JioPhone Next: ஜியோபோன் நெக்ஸ்ட் முக்கிய அம்சங்கள்: வீடியோ வெளியீடு!

JioPhone Next: ஜியோபோன் நெக்ஸ்ட் முக்கிய அம்சங்கள்: வீடியோ வெளியீடு!

ஜியோபோன் நெக்ஸ்ட்

ஜியோபோன் நெக்ஸ்ட்

இந்த போன் 13 மெகா பிக்சல் பின்புற கேமராவை கொண்டுள்ளதும் வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயக்கப்படும் பிரகதி ஓஎஸ் -இல் (Pragati OS) இயங்கும் என்பதை வீடியோ வெளிப்படுத்துகிறது.

  • Share this:
    ஜியோபோன் நெக்ஸ்ட்  மொபைல் குறித்த 'Making of JioPhone Next’ என்னும் வீடியோவை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் குறித்த சிறப்பு அம்சங்கள் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (RIL) 44 வது ஆண்டு பொதுக் கூட்டம் (AGM) கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அப்போது ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் குறித்து அறிவிக்கப்பட்டது.  இந்த மொபைல் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜியோபோன் நெக்ஸ்டுக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ’Making of JioPhone Next’ என்ற பெயரில் ஜியோபோன் நெக்ஸ்ட் தொடர்பான வீடியோவை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    தனது மற்ற சேவைகளை போல ஜியோபோன் நெக்ஸ்டும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, இந்தியாவிற்காக தயாரிக்கப்பட்டது மற்றும் இந்தியர்களால் தயாரிக்கப்பட்டது என்பதை  வீடியோவில் ஜியோ நிறுவனம் மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளது.  டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் சம வாய்ப்பு மற்றும்  சம அணுகலை உறுதி செய்வதை ஜியோபோன் நெக்ஸ்ட் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இந்த போன் 13 மெகா பிக்சல் பின்புற கேமராவை கொண்டுள்ளதும் வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயக்கப்படும் பிரகதி ஓஎஸ் -இல் (Pragati OS) இயங்கும் என்பதை வீடியோ வெளிப்படுத்துகிறது. மலிவு விலையில் தடையற்ற அனுபவத்தை வழங்கும் அதே வேளையில் அனைவருக்கும் முன்னேற்றத்தை ( பிரகதி என்பதற்கு தமிழில் (முன்னேற்றம் என்று பொருள்) கொண்டு வருவதற்காக ஜியோ மற்றும் கூகுள் ஆகிய இரு நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.


    ரிலையன்ஸ் ஜியோ  இந்த மொபைலில் குவால்காம் மொபைல் பிராஸசர் இடம்பெறும் என்று அறிவித்துள்ளது, பிராஸசர் சாதனத்தின் செயல்திறன், ஆடியோ மற்றும் பேட்டரியை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆனால், எந்த  சிப்செட் மாடல் என்பது குறித்து தெளிவாக இல்லை.

    இதற்கிடையில்,  ஜியோபோன் நெக்ஸ்டின் சில குறிப்பிடத்தக்க அம்சங்களை தனித்தனியாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. பயனர்கள் சாதனத்தை இயக்குவதற்கும் (அப்ளிக்கேசன்களை திறக்கவும் அல்லது அமைப்புகளை நிர்வகிக்கவும்) மற்றும் தங்களுக்கு பரிச்சயமான மொழியில் இணையத்திலிருந்து தகவல்களை எளிதாகப் பெறுவதற்கும் வாய்ஸ் அசிஸ்டெண்ட் போன்ற வசதிகள் இதில் அடங்கும்.

    ஜியோபோன் ஆனது "ஸ்மார்ட் மற்றும் சக்திவாய்ந்த கேமரா" உடன் வரும்.  போர்ட்ரெய்ட் மோட், நைட் மோட் மற்றும் பல்வேறு  புகைப்பட முறைகளை பயனர் பெற முடியும். தனிப்பட்ட இந்திய ஆக்மென்டட் ரியாலிட்டி ஃபில்டர்களையும் இந்த போனில் பயனர்கள் பெற முடியும். இதன் மூலம்,  புகைப்படங்களை பயனர்கள் தங்களின் உணர்ச்சிகள் மற்றும் விழாக்களுடன் இணைக்க முடியும். ஜியோபோன் நெக்ஸ்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: