ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தற்போது மக்களிடையே முக்கியமான தேவைகளாக மாறிவிட்டது.
மிகக்குறைந்த விலையில் இணைய வசதியை அளித்த ஜியோ, அடுத்ததாக லட்சக்கணக்கான இந்தியர்கள் பயனடையும் வகையில் மிகக்குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் நெக்ஸ்ட் (Jiophone Next) ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக லான்ச் செய்கிறது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் வெளிவந்த, குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ரூ. 1999 முதல் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 6499. மீதமுள்ள தொகையை ஈஸி இஎம்ஐ திட்டங்களாக 18 மாதம் முதல் 24 மாதங்கள் வரை மாதாமாதம் செலுத்தலாம் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப் வைத்து உருவாக்கப்பட்டது. அது மட்டுமன்றி இதில் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் ப்ராசெஸ்சார் உள்ளிட்ட முக்கியமான அம்சங்கள் உள்ளது. இந்த ஜியோபோன் பற்றி எல்லா விவரங்களும் தற்போது வெளிவந்துள்ள நிலையில், நீங்கள் எப்படி இந்த போனை வாங்க விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றிய விவரங்கள் இங்கே,
இந்த தீபாவளிக்கு ஸ்டோர்களில் ஜியோபோன் விற்பனை செய்யப்பட உள்ளது. உங்கள் அருகில் இருக்கும் கடைகளில் ஜியோபோன் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள விரும்பினால், jio.com இல் இருந்து ஒரு SMS அறிவிப்பை பெறலாம். அந்த அறிவிப்பை இயக்குவது எப்படி என்பது கீழே விளக்கப்பட்டுள்ளது.
ஸ்டெப் 1: ஜியோவின் அதிகாரபூர்வமான இணையத்தளமான, jio.com தளத்துக்கு சென்று. மேற்புறத்தில் இருக்கும் JioPhone Next என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 2: “’I am interested” என்பதை கிளிக் செய்து, உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
ஸ்டெப் 3: விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்
ஸ்டெப் 4: உங்கள் தனிப்பட்ட தகவலான, அஞ்சல் குறியீடு, நீங்கள் வசிக்கும் இடம் ஆகிய விவரங்களை உள்ளிடுங்கள்.
ஸ்டெப் 5: மேற்கூறிய தகவல்களை நீங்கள் உள்ளிட்ட பிறகு, உங்களுக்கு மொபைல் எண்ணுக்கு ஒரு SMS வரும். உங்கள் அருகில் உள்ள ஸ்டோரில் JioPhone Next ஸ்டாக் வந்தவுடன் உங்களுக்கான நோட்டிஃபிக்கேஷன் வரும் என்று அந்த SMS இல் இருக்கும்.
Also read... விண்டோஸ் 11 வசதியுடன் ரூ.50000-க்குள் கிடைக்கும் டாப் 5 லேப்டாப்கள்!
தற்போது பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் யூசர்கள் மொழி விருப்பத்தைத் தேர்வு செய்யும் ஆப்ஷனுடன் வருகிறது. ஜியோபோன் நெக்ஸ்ட் இன்னும் ஒருபடி முன்னேறி சென்று படிக்க முடியாத மக்களுக்கான உள்ளடக்கத்தை அவர்கள் மொழியிலேயே மொழிபெயர்ப்பு செய்து திரையில் என்ன இருக்கிறது என்பதை குரல் வழியாக கேட்கும் வசதியை கட்டமைத்துள்ளது. இந்த சிறப்பம்சம் OS இன் Read Aloud மற்றும் மொழிபெயர்ப்பு அம்சங்கள் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.
ஜியோ போன் நெக்ஸ்ட்டில் ஜியோ ஆப்ஸில் உள்ள பல்வேறு சேவைகள் பற்றிய தகவல்களை கூகுள் அசிஸ்டன்ட் வழியாக கேட்டு பெற முடியும். அவ்வபோது புதுப்பிக்கப்படும் ஆண்ட்ராய்டு அப்டேட்களுக்கு ஏற்றவாறு உங்கள் மொபைலை புதுப்பித்துக் கொள்ளக்கூடிய வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. கூகுள் பிளே உடன் வரும் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனில் கூகுளின் பாதுகாப்பும், மால்வேர் புரொட்டக்ஷனும் உள்ளது. கூகுள் பிளே இருப்பதால் நீங்கள் விரும்பும் ஆயிரக்கணக்கான ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து பயனடையலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.