சாம்சங்கை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ஜியோ போன்!

ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் சேவையை நாடு முழுவதும் முப்பது கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

Web Desk | news18
Updated: April 27, 2019, 11:27 AM IST
சாம்சங்கை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ஜியோ போன்!
ஜியோஃபோன்
Web Desk | news18
Updated: April 27, 2019, 11:27 AM IST
2019-ம் ஆண்டின் முதல் காலாண்டில் அதிகம் விற்பனையான செல்பேசி என்ற பெருமையை ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோஃபோன் பெற்றுள்ளதாக கவுண்டர்பாயிண்ட்(Counterpoint) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் சேவையை நாடு முழுவதும் முப்பது கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்திய ஃபோன் சந்தையில் ஸ்மார்ட்போன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் 400 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஃபீச்சர் ஃபோன்களை (Feature Phone) பயன்படுத்தி வருகின்றனர்.


இவர்களுக்காகவே ரிலையன்ஸ் ஜியோ 4ஜி ஃபீச்சர் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்திய ஃபீச்சர்போன் சந்தையில் தற்போது வரை ரிலையன்ஸ் ஜியோ 30 சதவீதத்தை கைப்பற்றியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

ஃபிச்சர் போன் சந்தையில் 15 சதவீதத்துடன் சாம்சங் நிறுவனம் இரண்டாம் இடத்திலும், 13 சதவீதத்துடன் லாவா 3-ம் இடத்திலும் உள்ளது.

2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் புதியதாக 2 கோடி வாடிக்கையாளர்கள் டெலிகாம் இணைப்புகளைப் பெற்றுள்ளார்கள். அதில் ரிலையன்ஸ் ஜியோ 80 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதாக தொலைதொடர்பு துறை மேற்பார்வை நிறுவனமான CLSA தெரிவித்துள்ளது.

Loading...

மேலும் பார்க்க:
First published: April 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...