ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

விரைவில் வருகிறது சோட்டா பீம் வீடியோகேம் - அறிமுகம் செய்யும் ஜியோ கேம்ஸ்

விரைவில் வருகிறது சோட்டா பீம் வீடியோகேம் - அறிமுகம் செய்யும் ஜியோ கேம்ஸ்

சோட்டா பீம் கதாபாத்திரம்  பிறந்தது மே மாதம் தான் என்பதால், இந்த மாதத்திலேயே இதை ஜியோ கேம்ஸ்சில் கொண்டுவர பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

சோட்டா பீம் கதாபாத்திரம்  பிறந்தது மே மாதம் தான் என்பதால், இந்த மாதத்திலேயே இதை ஜியோ கேம்ஸ்சில் கொண்டுவர பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

சோட்டா பீம் கதாபாத்திரம்  பிறந்தது மே மாதம் தான் என்பதால், இந்த மாதத்திலேயே இதை ஜியோ கேம்ஸ்சில் கொண்டுவர பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  குழந்தைகளை மிகவும் கவர்ந்த கார்டூன்களில் ஒன்றான சோட்டா பீம், விரைவில் வீடியோ கேம் வடிவில் வரவுள்ளது. சோட்டா பீம் கதாபாத்திரத்தை வடிவமைத்த Green Gold Animation நிறுவனமும், ஜியோ கேம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த வீடியோ கேமை உருவாக்கி வருகின்றனர்.

  விரைவில் ஜியோ கேம்ஸ் தளத்தில் இந்த வீடியோ கேம் கிடைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோட்டா பீம் கதாபாத்திரம்  பிறந்தது மே மாதம் தான் என்பதால், இந்த மாதத்திலேயே இதை ஜியோ கேம்ஸ்சில் கொண்டுவர பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் உள்ள ஜியோ கேம்ஸ் ஆப்பிலும், ஜியோ செட் டாப் பாக்ஸிலும் இந்த கேமை விளையாடலாம். இந்தியாவில் மிகவும் பிரபலமான குழந்தைகள் கார்டூன் தொடராக இருக்கும் சோட்டா பீம், பத்தாண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகிவருகிறது.

  இந்தியாவில் அதிக நாள்கள் ஓடிய அனிமேஷன் தொடராக இது உள்ளது. வேட்டி உடுத்திய சிறுவனான சோட்டா பீம், தனது நண்பர்களுடன் சாகச செயல்களில் ஈடுபட்டு மக்களுக்கு உதவும் கதாபாத்திரமாக திகழ்வதன் மூலம் இந்தியாவின் கோடிக்கணக்கான குழந்தைகளை மிகக் கவர்ந்த கதாபாத்திரமாக அது உருவெடுத்துள்ளது. தற்போது கேம்ஸ் வடிவிலும், இந்த கதாபாத்திரம் குழந்தைகளை சென்றடைய உள்ளது.

  இது தொடர்பாக கீன் கோல்ட் அனிமேஷன் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஸ்ரீநிவாஸ் கூறுகையில், "ஜியோ நிறுவனத்துடன் இணைந்து செயல்படவும், ஜியோ கேம்ஸ்சில் இணைந்து கொள்வதிலும் மிக்க மகிழ்ச்சி, பல்வேறு தளங்களில் இயங்கிவரும் ஜியோ கேம்ஸ், இனி இந்தியாவிற்கு மிகவும் பிடித்தமான அனிமேஷன் ஷோவான சோட்டா பீம்மை அதன் ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. நாங்கள் ஐந்து ஹைப்பர் கேஸ்சுவல் கேம்ஸ்சை முதல்கட்டமாக வழங்கவுள்ளோம். வருங்காலத்தில் இதை மேலும் விரிவாக்கவுள்ளோம்" என்றார்.

  இதையும் படிங்க: OnePlus10R ஒரு சமரசமற்ற கேமிங் அனுபவத்திற்கு உறுதியளிக்கிறது, சக்திவாய்ந்த புதிய SoC மற்றும் மிகப்பெரிய கூலிங் சிஸ்டத்திற்கு நன்றி

  இந்தியாவின் முன்னணி ஸ்டுடியோக்களில் ஒன்றான கீரீன் கோல்ட் அனிமேஷன் துறையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக தனது முத்திரையை பதித்துவருகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் ஷோக்களை சுமார் 10 குழந்தைகள் பார்க்கின்றனர். நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் இருந்து அனிமேஷன் கன்டென்ட் தரும் ஒரு நிறுவனம் கீரீன் கோல்ட் மட்டுமே. இதன் தயாரிப்புகளை 190க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் கண்டு களிக்கின்றனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Jio, Video Games