JIO Fiber : ரிலையன்ஸ் ஜியோ ஃபைபரின் அசத்தலான பிளான்கள்

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ புதிய போஸ்ட்பெய்ட் ஜியோ ஃபைபர் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. 4 கே செட் டாப் பாக்ஸுடன் மாதாந்திர சந்தா ரூ.399 முதல் தொடங்குகிறது.

  • Share this:
JioFiber போஸ்ட்பெய்ட் திட்டத்தில் zero upfront entry cost” இல்லை என்றும் மற்றும் இன்ஸ்டாலேசன் கட்டணமும் இல்லை என கூறப்படுகிறது. இந்த சேவையை நீங்கள் மாதந்தோறும் ரூ.399 செலுத்தியோ அல்லது ஆண்டுதோறும் மற்றும் 6 மாதம் என்கிற விருப்பத்தில் பெற்று கொள்ளலாம். மேலும், இந்த சேவையை நீங்கள் பெற்றால் 4கே செட் டாப் பாக்ஸ் பெறுவீர்கள். ஆனால் சந்தாதாரர்கள் திருப்பிச் செலுத்தக்கூடிய பாதுகாப்பு வைப்புத்தொகையாக ரூ .1,000 செலுத்த வேண்டும்

ரூ .999 மற்றும் அதற்கு மேற்பட்ட திட்டங்களுக்கு, சந்தாதாரர்கள் 15 கட்டண OTT சேவையை பெறுவார்கள். ஜியோ ஃபைபர் போஸ்ட்பெய்ட் ஜூன் 17, 202 முதல் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதில் சமமான அப்லோடு வேகம் மற்றும் டவுன்லோடு வேகத்தை வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ கூறுகிறது. ரிலையன்ஸ் ஜியோ இதுவரை போஸ்ட்பெய்ட் யூசர்களுக்கு பிரத்யேகமாக எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

Also Read : ஆதாருடன் உங்கள் பான் எண்ணை இணைத்து விட்டீர்களா? 5 முக்கிய தகவல்கள் இதோ!

இருப்பினும், ஜியோ ஃபைபர் திட்டங்கள் 399 ரூபாயிலிருந்து தொடங்கி மாதத்திற்கு ரூ .8,499 வரை உள்ளது. 399 ரூபாய் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால், ஜியோ ஃபைபர் 30 எம்.பி.பி.எஸ் வேகம் மற்றும் அன்லிமிடெட் நெட் , அன்லிமிடெட் அழைப்பு நிமிடங்களுடன், லேண்ட்லைனையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் எவ்வித OTT சேவையையும் பெற முடியாது.

ரூ.699 ரூபாய் திட்டத்தில் 100 எம்.பி.பி.எஸ் வேகம் அன்லிமிடெட் நெட், அன்லிமிடெட் அழைப்பு நிமிடங்களுடன், லேண்ட்லைனையும் வழங்குகிறது. ரூ .999 திட்டத்தில் அன்லிமிடெட் நெட், அன்லிமிடெட் அழைப்பு போன்ற அடிப்படை சலுகைகள் உள்ளன. மேலும் இந்த திட்டத்தில் 150mbps வேகம், ரூ .1,000 மதிப்புள்ள 14 ஆப்ஸ்களின் சேவையை வழங்குகிறது.

Also Read : உலகின் வலிமையான தொலைத் தொடர்பு பிராண்டாக மாறிய ரிலையன்ஸ் ஜியோ 

நீங்கள் அதிக வேகத்தை விரும்பினால், 300mbps மற்றும் 500mbps வேகத்தை வழங்கும் ரூ .1,499 அல்லது ரூ 2,499 திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். இதில் அன்லிமிடெட் நெட், அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ரூ .1,500 மதிப்புள்ள 15 ஆப்ஸ்களின் சேவைகளை பெற முடியும். 1 ஜி.பி.பி.எஸ் திட்டங்களைப் பொருத்தவரை ஜியோ ஃபைபர் இரண்டு திட்டங்களைக் கொண்டுள்ளது. அவை ரூ .3,999 மற்றும் ரூ.8,499 ஆகும். ஆனால், இந்த இரண்டு திட்டங்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு அன்லிமிடெட் டேட்டாவை பொறுத்தவரை, இது ரூ .39999 திட்டத்திற்கு 3300 ஜிபி மற்றும் ரூ. 8,499 திட்டத்தில் 6600 ஜிபி ஆகும். அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், சோனி லிவ், ஜி 5, வூட் செலக்ட், சன் நெக்ட் மற்றும் ஹோய்சோய் போன்றவற்றின் சேவையையும் பெறுவீர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: