ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

விலை இவ்வளவு கம்மியா? இந்தியாவில் அறிமுகமானது ஜியோபுக்... தாறுமாறு சிறப்பம்சங்கள்!

விலை இவ்வளவு கம்மியா? இந்தியாவில் அறிமுகமானது ஜியோபுக்... தாறுமாறு சிறப்பம்சங்கள்!

ஜியோபுக்

ஜியோபுக்

Jiobook Laptop | ஜியோபுக் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த லேப்டாப் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இஎம்எம்சி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதை 128 ஜிபி வரை நீட்டிக்க முடியும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தகவல் தொலை தொடர்புத்துறையில் முன்னணியில் விளங்கும் ரிலையன்ஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஜியோ, சிம்கார்டு, செல்போன், டெட்டா சேவைகளைத் தொடர்ந்து தற்போது லேப்டாப் விற்பனையில் களமிறங்கியுள்ளது. தற்போது குறைந்த பட்ஜெட்டில் சூப்பரான லேப்டாப்பை தேடி கொண்டிருப்பவர்களுக்காகவே தகவல் தொடர்புத்துறையில் ஜாம்பவானாக வலம் வரும் ஜியோ மலிவு விலை லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிறுவனத்தின் பட்ஜெட் விலை லேப்டாப் ஆன “ஜியோபுக்” அக்டோபர் தொடக்கத்தில் நடைபெற்ற இந்தியா மொபைல் காங்கிரஸ் (ஐஎம்சி) நிகழ்ச்சியில் வெளியிட்டது. அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் முன்பதிவு மூலமாக ரூ.19,500க்கு ஜியோபுக் லேப்டாப் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் விதமாக ரிலையன்ஸ் டிஜிட்டல் இணையதளத்தில் ஜியோபுக் ரூ.15,799க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

ஜியோபுக் அம்சங்கள்:

ஜியோபுக் மாணவர்களின் கல்விக்கு உதவுவதற்காக தயாரிக்கப்பட்ட அடிப்படை அம்சங்களைக் கொண்ட மலிவு விலை லேப்டாப் ஆகும். இது 1366×768 பிக்சல்கள் ரெசல்யூஷன் 11.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் நிறம் ப்ளூ கலர் ஆகும்.

ஜியோபுக் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த லேப்டாப் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இஎம்எம்சி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதை 128 ஜிபி வரை நீட்டிக்க முடியும்.

Also Read : ரூ.15,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் பட்டியல்.! 

ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஜியோ OS மூலமாக இயங்கக்கூடிய ஜியோபுக்கில் ஜியோ ஆப்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் 365 ஆப்ஸ் ஆகியவை உள்ளது. Wi-Fi, புளூடூத் 5.0, இரண்டு USB போர்ட்கள், HDMI போர்ட், காம்போ போர்ட் மற்றும் SD கார்டு ஸ்லாட் ஆகியவற்றுடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ளும் அடங்கும்.

5000 mAh பேட்டரியைக் கொண்ட ஜியோபுக் லேப்டாப் ஆனது, ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் வரை நீடிக்கக்கூடியது.

ஜியோபுக்கை வாங்குவது எப்படி?

ஜியோபுக் லேப்டாப்பை ரிலையன்ஸ் டிஜிட்டலின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் பக்கத்தில், 15,799 ரூபாய்க்கு வாங்க முடியும். ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்ற வங்கிகளின் பரிவர்த்தனைக்கு 5000 ரூபாயும், முன்னணி வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் மீது 3,000 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடியாக கிடைக்கிறது. கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.5,000 தள்ளுபடியும் உள்ளது.

Also Read : உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படுவதற்கான காரணங்கள் - அதிகாரப்பூர்வமான விளக்கம்.!

ஜியோபுக் லேப்டாப்களை தயாரிக்க ஜியோ நிறுவனம் உள்நாட்டு உற்பத்தியாளரான ஃப்ளெக்ஸ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் நூறாயிரக்கணக்கான லேப்டாப்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் உடன் ஜியோ கூட்டு சேர்ந்துள்ளதால், ஆர்ம் லிமிடெட் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கம்ப்யூட்டிங் சிப்களுக்கும் மற்றும் ஓஎஸ், ஆப் தயாரிப்பிற்கு விண்டோஸ் நிறுவனமும் ஒத்துழைப்பு அளித்துள்ளது. ஜியோ நிறுவனம் தற்போது ஜியோபுக்கை பொது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், 5ஜி ஸ்மார்ட் போனை ஜியோ நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தும் என வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Published by:Selvi M
First published:

Tags: Budget laptop, Jio, Technology