ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

பட்ஜெட் விலையில் லேப்டாப்.. 4ஜி கார்டுடன் வரும் ‘ஜியோபுக்’ விலை என்னத் தெரியுமா.? 

பட்ஜெட் விலையில் லேப்டாப்.. 4ஜி கார்டுடன் வரும் ‘ஜியோபுக்’ விலை என்னத் தெரியுமா.? 

ஜியோபுக்

ஜியோபுக்

JioBook | குறைந்த பட்ஜெட்டில் சூப்பரான லேப்டாப்பை தேடிக்கொண்டிருப்பவர்களுக்காகவே தகவல் தொடர்புத்துறையில் ஜாம்பவானாக வலம் வரும் ஜியோ மலிவு விலை லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கொரோனா காலத்தில் மட்டுமின்றி தற்போதும் ஆன்லைன் மூலமாக குழந்தைகள் மியூசிக், பாட்டு, நடனம் போன்ற சிறப்பு வகுப்புகளை கற்று வருகின்றனர். கல்லூரி மாணவர்களும் கம்யூட்டர் மூலம் நிறைய விஷயங்களை கற்க ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் அனைவருக்குமே நிறைய சிறப்பம்சங்களைக் கொண்ட லேப்டாப்பை அதிக விலை கொடுத்து வாங்குவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். தற்போது குறைந்த பட்ஜெட்டில் சூப்பரான லேப்டாப்பை தேடிக்கொண்டிருப்பவர்களுக்காகவே தகவல் தொடர்புத்துறையில் ஜாம்பவானாக வலம் வரும் ஜியோ மலிவு விலை லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ நிறுவனம் குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 'ஜியோபுக்' என்ற பட்ஜெட் ப்ரெண்ட்லி லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியர்கள் கையில் குறைவான விலை செல்போன்களை கொடுத்து, டெலிகாம் துறையில் புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனம், தற்போதைய ஆன்லைன் யுகத்தின் தேவைக்கு ஏற்ப மலிவு விலை லேப்டாப்பை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது.

4ஜி சிம் கார்டுடன் கூடிய ‘ஜியோபுக்’ 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்டமாக பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு மலிவு விலை லேப்டாப் இம்மாதம் முதல் விற்பனை செய்யப்படும் என்றும், அடுத்த மூன்று மாதங்களில் கமர்ஷியல் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இது ஜியோஃபோனைப் போலவே பெரியதாக இருக்கும்" எனக்குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்திய ஸ்மார்ட் போன்கள், இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட் போனாக உள்ளது. ஜியோ ஸ்மார்ட் போனின் 5ஜி வெர்ஷன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என வாடிக்கையாளர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இப்படியொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Also Read : ரூ.20,000 பட்ஜெட்டில் ஒரு தரமான 5ஜி போனை தேடுறீங்களா? 1 இல்ல 9 ஆப்ஷன்ஸ் இருக்கு!

ஜியோபுக் பற்றிய சில முக்கிய தகவல்கள்:

ஜியோபுக் லேப்டாப்களை தயாரிக்க ஜியோ நிறுவனம் உள்நாட்டு உற்பத்தியாளரான ஃப்ளெக்ஸ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் நூறாயிரக்கணக்கான லேப்டாப்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜியோபுக் லேப்டாப்பில் ஜியோவுக்கு சொந்தமான இயங்குதளமும் (OS), ஆப்களை ஜியோ ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யும் வசதியும் இடம் பெற்றிருக்கும்.

கார்ப்ரேட் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அலுவலகத்திற்கு வெளியே டேப்லெட்டுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த ஸ்மார்ட் ப்ளஸ் காம்பேக்ட் லேப்டாப்பை பயன்படுத்த ஊக்குவிக்க உள்ளது.

குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் உடன் ஜியோ கூட்டு சேர்ந்துள்ளதால், ஆர்ம் லிமிடெட் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கம்ப்யூட்டிங் சிப்களுக்கும் மற்றும் ஓஎஸ், ஆப் தயாரிப்பிற்கு விண்டோஸ் நிறுவனமும் ஒத்துழைப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : 1ஜி முதல் 5ஜி வரை... இணையத் தொழில்நுட்ப வரலாறு - கடந்து வந்த பாதை

ஆராய்ச்சி நிறுவனமான ஐடிசி படி, இந்தியாவில் ஹெச்பி, டெல் மற்றும் லெனோவா ஆகிய நிறுவனங்கள் மூலம் கடந்த ஆண்டு 4.8 மில்லியன் யூனிட் கம்யூட்டர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜியோ புக்கின் அறிமுகம் ஒட்டுமொத்த லேப்டாப் விற்பனையில் 15 சதவீதத்தை பிடிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Also Read : '5ஜி' 4ஜியை விட 20 மடங்கு அதிக வேகம்... தகவல் தொடர்பு துறையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும்?

2020 ஆம் ஆண்டில் கேகேஆர் அண்ட் கோ மற்றும் சில்வர் லேக் போன்ற உலகளாவிய முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 22 பில்லியன் டாலர்களை திரட்டியது உலக அளவில் கவனம் ஈர்த்தது. மேலும் மலிவு விலை 4ஜி டேட்டா, 4ஜி ஸ்மார்ட் போன் போன்ற திட்டங்களால் டெலிகாம் துறையில் ஜியோ நிறுவனம் 2வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Budget laptop, Jio, Laptop, Technology