• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஜியோ vs ஏர்டெல்: 2GB டெய்லி டேட்டா வழங்கும் சில ப்ரீபெய்ட் பிளான்கள்..

ஜியோ vs ஏர்டெல்: 2GB டெய்லி டேட்டா வழங்கும் சில ப்ரீபெய்ட் பிளான்கள்..

Jio - Airtel

Jio - Airtel

டெய்லி மொபைல் டேட்டா இப்போது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே நாளொன்றுக்கு 2GB டேட்டாவை வழங்கும் சிறந்த ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் பிளான்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

  • Share this:
கோவிட் காரணமாக பல நிறுவனங்கள் வொர்க் ஃபரம் ஹோம் ஆப்ஷனை வழங்கி வந்ததை நாம் பார்த்தோம். கோவிட் தொற்று குறைந்துள்ளதன் காரணமாக பலர் அலுவலக வேலைக்கு திரும்பினாலும் கூட, அனைத்து ஊழியர்கள் அல்லது அலுவலகங்கள் இந்த முறைக்கு மாறி விடவில்லை. முன்பை போலவே தற்போதும் வொர்க் ஃபரம் ஹோம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

வொர்க் ஃபரம் ஹோமில் இருக்கும் அனைவரும் பிராட்பேண்ட் கனெக்ஷனை கொண்டிருக்கவில்லை. பலரும் டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் மொபைல் டேட்டாவை சார்ந்து இருக்கிறார்கள். எனவே டெய்லி மொபைல் டேட்டா இப்போது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே நாளொன்றுக்கு 2GB டேட்டாவை வழங்கும் சிறந்த ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் பிளான்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் ரூ.249 - ரூ.2,599 வரையிலான விலையில் தினசரி 2GB திட்டங்களை வழங்கி வருகின்றன. முதலில் ஜியோ வழங்கும் திட்டங்கள் பற்றி பார்க்கலாம்.

ஜியோ:

1. ரூ.2,599 ப்ரீபெய்ட் பிளான்..

இந்த பிளான் 1 வருடத்திற்கு (365 நாட்களுக்கு) தினசரி 2GB டேட்டாவை வழங்குகிறது. தவிர 10GB கூடுதல் டேட்டாவுடன் மொத்தம் 740GB டேட்டாவை வழங்குகிறது. மேலும் ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச சந்தாவுடன் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் நாளொன்றுக்கு 100 SMS-களை வழங்குகிறது.

Also read:  ரூ.52,000 அபேஸ்... மொபைல் தொலைந்து போனால் இப்படியும் ஒரு பிரச்னை இருக்கு..!

2. ரூ.888 ப்ரீபெய்ட் பிளான்..

இது 84 நாட்களுக்கு தினசரி 2GB டேட்டாவை மற்றும் கூடுதலாக 5GB டேட்டா என மொத்தம் 173GB டேட்டாவை வழங்குகிறது. இதுவும் ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச சந்தா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் நாளொன்றுக்கு 100 SMS-களை வழங்குகிறது.

3. ரூ.666 ப்ரீபெய்ட் பிளான்..

இந்த பிளான் நாளொன்றுக்கு 2GB டேட்டா வீதம் 56 நாட்களுக்கு மொத்தம் 112GB டேட்டாவை தருகிறது. ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச சந்தா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் நாளொன்றுக்கு 100 SMS-களை இந்த பிளானும் வழங்குகிறது.

4. ரூ.599 ப்ரீபெய்ட் பிளான்..

84 நாட்களுக்கு நாளொன்றுக்கு 2GB டேட்டா வீதம் மொத்தம் 168GB டேட்டாவை அளிக்கிறது. ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச சந்தா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் நாளொன்றுக்கு 100 SMS-களை இந்த பிளானும் வழங்குகிறது.

5. ரூ.444 ப்ரீபெய்ட் பிளான்..

ஒரு நாளைக்கு 2GB டேட்டா என 56 நாட்களுக்கு மொத்தம் 112GB டேட்டா வழங்கப்படுகிறது.

Also read:  பெண்ணை நிர்வாணப்படுத்தி போலீஸ் நிலையத்தில் நடனம் ஆட வைத்த பெண் காவல் ஆய்வாளர்..

6. ரூ.249 ப்ரீபெய்ட் பிளான்..

ஒரு நாளைக்கு 2GB டேட்டா என 28 நாட்களுக்கு 56GB டேட்டா இந்த பிளானில் கிடைக்கிறது. மேற்கண்ட மற்றும் இந்த பிளானுக்கும் ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச சந்தா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் நாளொன்றுக்கு 100 SMS-கள் வழங்கப்படுகிறது.

ஏர்டெல்:

1. ரூ.699 ப்ரீபெய்ட் பிளான்..

நாளொன்றுக்கு 2GB என 56 நாட்களுக்கு மொத்தம் 112GB டேட்டா இந்த பிளானில் கிடைக்கிறது. இந்த பிளான் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ், நாளொன்றுக்கு 100 SMS-கள், பிரைம் வீடியோ மொபைல் எடிஷனுக்கான ஒரு மாத ஃப்ரீ ட்ரையல் , டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான இலவச அணுகல், FASTag ரீசார்ஜில் ரூ.100 கேஷ்பேக், Wynk மியூசிக்கிற்கான இலவச அணுகல், இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் Apollo 24 | 7 Circle-க்கான மூன்று மாத சந்தா உள்ளிட்ட பலன்களை தருகிறது.

2. ரூ.698 ப்ரீபெய்ட் பிளான்..

மொத்தம் 84 நாட்களுக்கு நாளொன்றுக்கு 2GB டேட்டாவை வழங்குகிறது. இந்த பிளான் வழங்கும் பலன்கள்: அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ், நாளொன்றுக்கு 100 SMS-கள், பிரைம் வீடியோ மொபைல் எடிஷனுக்கான ஒரு மாத ஃப்ரீ ட்ரையல், FASTag ரீசார்ஜில் ரூ.100 கேஷ்பேக், Wynk மியூசிக்கிற்கான இலவச அணுகல், இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் Apollo 24 | 7 Circle-க்கான மூன்று மாத சந்தா.

Also read:  மொபைலில் சத்தமாக பாட்டு கேட்கும் பயணிகளை பேருந்தை விட்டு இறக்கிவிடலாம் - உயர்நீதிமன்றம் அதிரடி

3. ரூ.449 ப்ரீபெய்ட் பிளான்..

56 நாட்களுக்கு நாளொன்றுக்கு 2GB டேட்டாவை வழங்குகிறது, இந்த பிளானும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ், நாளொன்றுக்கு 100 SMS-கள், பிரைம் வீடியோ மொபைல் எடிஷனுக்கான ஒரு மாத ஃப்ரீ ட்ரையல், FASTag ரீசார்ஜில் ரூ.100 கேஷ்பேக், Wynk மியூசிக்கிற்கான இலவச அணுகல், இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் Apollo 24 | 7 Circle-க்கான மூன்று மாத சந்தா உள்ளிட்ட நன்மைகளை அளிக்கிறது.

4. ரூ.298 ப்ரீபெய்ட் பிளான்..

நாளொன்றுக்கு 2GB டேட்டா என மொத்தம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது இந்த பிளான். மேற்கண்ட பிளான்களில் நாம் பார்த்த அனைத்து நன்மைகளும் இந்த பிளானிற்கும் கிடைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: