ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் True 5G சேவையை தொடங்கிய ஜியோ நிறுவனம்

டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் True 5G சேவையை தொடங்கிய ஜியோ நிறுவனம்

ஜியோ 5ஜி

ஜியோ 5ஜி

இந்த மாற்றத்திற்கான சக்தியும், அதில் உள்ள பன்மடங்கான நன்மைகளும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க தான் ஜியோ பொறியாளர்கள் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வருகிறார்கள்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 1ஜிபிக்கும் அதிகமான வேகத்தில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சேவையாக ஜியோ சேவை உருவாகியுள்ளது.

  டெல்லி, குருகிராம், நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உண்மையான 5ஜி (True 5g) சேவை வழங்கும் ஒரே நிறுவனமாக தற்போது ஜியோ உள்ளது. மேலும் நவீன தொழில்நுட்பம் மூலம், அதிவேக இண்டர்நெட் வழங்கி தற்போது மேற்குறிப்பிட்ட இடங்களில் அனைத்து இடங்களையும் உள்ளடக்கி அதன் சேவைகளை வழங்கி வருகிறது.

  மேலும், இந்த மாற்று தொழில்நுட்பம், முக்கிய மக்கள் வசிப்படங்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைகழகங்கள், அரசு கட்டிடங்கள், முக்கிய சுற்றுலா தளங்கள் மற்றும் ஓட்டல்கள், முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் என குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமில்லாமல், அனைத்து முக்கியமான இடங்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : புதிய SMS விதிகளை அறிமுகம் - டெலிகாம் நிறுவனங்களுக்கு 15 நாட்கள் காலக்கெடு!

  இந்த நிகழ்வைபற்றி ஜியோ செய்திதொடர்பாளர், “டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை உள்ளடக்கி, இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் எங்களுக்கு பெருமை.  5ஜி தொழில்நுட்பத்தை நாங்கள் திட்டமிட்டிருந்த பல இடங்களில் இப்போதே விரிவாக்க தொடங்கிவிட்டோம். மேலும், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உண்மையான 5ஜி தொழில்நுட்பம் இருக்கும் ஒரே நிறுவனம் ஜியோ தான். இந்த மாற்றத்திற்கான சக்தியும், அதில் உள்ள பன்மடங்கான நன்மைகளும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க தான் ஜியோ பொறியாளர்கள் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வருகிறார்கள்” என தெரிவித்தார்.

  ஜியோ வெல்கம் ஆஃபரை ஏற்கனவே டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இலட்சக்கனக்கான மக்கள் உபயோகிக்க தொடங்கிவிட்டார்கள். மேலும் கூடுதல் கட்டணமில்லாமல் அவர்கள் உபயோகப்படுத்தும், அன்லிமிட்டட் டேட்டா கீழுள்ள மூன்று காரணக்களால் தான் சாத்தியமானது.

  1. 4ஜி தொழில்நிட்பத்தை சார்ந்திருக்காமல், 5ஜி தொழில்நுட்பம் தனித்து இயக்கப்படுகிரது.

  2. 700 MHz, 3500 MHz, and 26 GHz ஆகிய பேண்டுகள் மூலம் வழங்கப்படும் 5ஜி தொழிழ்நுட்பம்.

  3.Carrier Aggregation : கேரியர் ஒருங்கிணைப்பு எனப்படும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த 5G அதிர்வெண்களைத் தடையின்றி ஒருங்கிணைக்கிறது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: 5G technology, Delhi, Jio, Jio Fiber