இந்தியாவின் மைஸ்பீட் போர்ட்டலில் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஜூன் மாதத்தில் சராசரியாக 16.5 மெகாபைட் (எம்.பி.பி.எஸ்) டவுன்லோட் வேகத்துடன் Reliance Jio 4G வேக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது என்று டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (Trai) தெரிவித்துள்ளது.
Upload செய்யும் வேகத்தின் அடிப்படையில் வோடஃபோன் மற்றும் ஐடியா முன்னிலை வகிக்கின்றன. ஐடியா 8 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் அப்லோட் ஸ்பீட் அட்டவணையில் ஜியோவைப் பின்தொடர்ந்தது. டவுன்லோட் ஸ்பீட் என்பது, மற்றவர்கள் அனுப்பிய செய்திகள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை சேமிக்க உதவுகிறது. அப்லோட் ஸ்பீட் என்பது தொடர்புகளுக்கு செய்திகள், படங்கள் போன்றவற்றை அனுப்ப உதவுகிறது. வோடஃபோன் மற்றும் ஐடியா தங்களது மொபைல் வணிகத்தை இந்தியாவில் இணைத்திருந்தாலும் வணிக ஒருங்கிணைப்பு நிலுவையில் இருப்பதால் தங்களது 4 ஜி ஸ்பீட் விவரங்களை தனித்தனியாக தெரிவிக்கின்றன.
ஜூன் மாதத்தில் வோடஃபோன் மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் 4 ஜி நெட்வொர்க்கில் டிராய் சராசரி டவுன்லோட் ஸ்பீட் 7.5 mbps மற்றும் 7.2 mbps-ஆக இருக்கிறது. அப்லோட் ஸ்பீடுக்கு, வோடஃபோன் மற்றும் ஐடியா ஆகியவை ஒவ்வொன்றும் 6.2 mbps ஸ்பீடுடன் தரவரிசையில் முன்னிலை வகித்தன. ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டுக்கும், சராசரி அப்லோட் ஸ்பீடு 3.4 mbps-ஆக இருந்தது. மார்ச்-ஏப்ரல் காலகட்டத்தில் தொலைதொடர்பு ஆபரேட்டர்களின் நெட்வொர்க்குகளின் டேட்டா ஸ்பீட் ஜூன் மாதத்தில் அதிகரித்ததாகக் காட்டியது.
பொதுமுடக்க காலத்தில், சரசரியாக ஜியோவின் பதிவிறக்க வேகம் 13.3 mbps,வோடபோன் 5.6 mbps,ஏர்டெல் 5.5 mbps மற்றும் ஐடியா 5.1 mbps-ஆகவும் இருந்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.