Home /News /technology /

வேகமான 4ஜி சேவையில் ஜியோ தொடர்ந்து முதலிடம் - TRAI தகவல்

வேகமான 4ஜி சேவையில் ஜியோ தொடர்ந்து முதலிடம் - TRAI தகவல்

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

வேகமான 4ஜி இணைய சேவை வழங்குவதில் ஜியோ நிறுவனம் தொடந்து முதலிடத்தில் உள்ளது.

    இணைய சேவை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுனங்கள் எவ்வளவு வேகமாக சேவைகளை வழங்குகின்றன என்ற புள்ளி விவரங்களை TRAI நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 4ஜி சேவை வழங்கும் நிறுவனங்களில் அதிக டவுன்லோட் ஸ்பீட் கொண்ட நிறுவனமாக ஜியோ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மார்ச் மாத புள்ளி விவரப்படி, ஜியோவின் டவுன்லோட் ஸ்பீட் 21.1 mbps ஆக உள்ளது.

    அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் வோடோபோன் இந்தியா நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தின் டவுன்லோட் ஸ்பீட் 17.9 mbps ஆக உள்ளது. மூன்றாவது இடத்தில் 13.7 mbps உடன் ஏர்டெல் நிறுவனம் உள்ளது. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இன் டவுன்லோட் ஸ்பீட் 6.1 mbps ஆக உள்ளது.

    பிப்ரவரி மாதத்தை ஒப்பிடும் போது ஜியோ நிறுவனத்தின் டவுன்லோட் ஸ்பீட் 2.5 சதவீதமும், வோடாபோன் இந்தியா, ஏர்டெல் நிறுவனங்களின் டவுன்லோட் ஸ்பீட் முறையே 2.7 சதவீதம், 8.6 சதவீதம் உயர்ந்துள்ளது.

    இதையும் படிங்க: உங்கள் வீட்டிற்கு சிறந்த அன்லிமிடெட் WIFI பிளான்களை தேடுகிறீர்களா? விவரங்கள் இங்கே..

    அதேவேளை, அப்லோட் ஸ்பீடை பொறுத்தவரை வோடாபோன் நிறுவனம் 8.2 உடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 7.3 mbps உடன் ஜியோ இரண்டாம் இடத்திலும், ஏர்டெல் 6.1 mbps உடன் ஏர்டெல் மூன்றாம் இடத்திலும், 5.1 mbps உடன் பிஎஸ்என்எல் நான்காம் இடத்திலும் உள்ளனர்.

    இணையத்தில் உள்ள கண்டென்டுகளை வாடிக்கையாளர்கள் வேகமாக பெறுவதை வைத்து டவுன்லோட் ஸ்பீடும், வாடிக்கையாளர்கள் தங்களின் கான்டேக்டுகளுக்கு படங்கள், வீடியோக்கள் அனுப்பும் வேகத்தை வைத்து அப்லோட் ஸ்பீடும் கணக்கிடப்படுகிறது. இதை TRAI நிறுவனம் மைஸ்பீட் என்ற அப்ளிகேஷன் மூலம் கணக்கிடுகிறது.

    இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, 2015ஆம் ஆண்டு முதல் இணையசேவை வழங்கிவருகிறது. நாட்டில் முதன்முதலாக 4ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்து வைத்தது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Reliance Jio

    அடுத்த செய்தி