அதிவேக 4ஜி நெட்வொர்க்... முதலிடத்தில் ரிலையன்ஸ் ஜியோ...!

இந்த சோதனையில், ஜியோ நிறுவனத்தின் டவுன்லோடு வேகம் நொடிக்கு 20.9 MB ஆக இருந்துள்ளது.

news18
Updated: March 16, 2019, 3:58 PM IST
அதிவேக 4ஜி நெட்வொர்க்... முதலிடத்தில் ரிலையன்ஸ் ஜியோ...!
ஜியோ (கோப்புப் படம்)
news18
Updated: March 16, 2019, 3:58 PM IST
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்ட இணைய வேக சோதனையில் 20.9MB டவுன்லோடு வேகத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.

வோடபோன் நிறுவனத்துடன் இணைந்துள்ள ஐடியா நிறுவனம் இந்த சோதனையின் போது தனித்தனியாகவே சோதனை செய்யப்பட்டன.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், நடத்திய இந்த சோதனையில், ஜியோ நிறுவனத்தின் டவுன்லோடு வேகம் நொடிக்கு 20.9 MB ஆக இருந்துள்ளது.


இது மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட அதிகமாக இருந்ததால், ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது.

இந்த போட்டியில் ரிலையன்ஸின் ஜியோவுக்கு அடுத்ததாக பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லின் டவுன்லோடு வேகம் நொடிக்கு வெறும் 9.4MB ஆக மட்டுமே இருந்தது. வோடபோன் டவுன்லோடு வேகம் 6.7MB ஆகவும் ஐடியாவின் டவுன்லோடு வேகம் 5.7MB ஆகவும் பதிவானது.

ஆனால், இந்தப் போட்டியில் அப்லோடு வேகம் தொடர்பான சோதனையில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களை வோடபோன் நிறுவனம் பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது.

Loading...

இந்த போட்டியில், நொடிக்கு 6MB பதிவேற்ற வேகத்துடன் வோடபோன் முதலிடத்தையும், 5.6MB வேகத்துடன் ஐடியா இரண்டாம் இடத்தையும், 4.5MB வேகத்துடன் ஜியோ மூன்றாவது இடத்தையும், 3.7MB வேகத்துடன் ஏர்டெல் நிறுவனம் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.

Also See:
First published: March 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...