Home /News /technology /

5ஜி சேவையில் புரட்சி... 6-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கும் ஜியோ!

5ஜி சேவையில் புரட்சி... 6-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கும் ஜியோ!

 ஜியோ

ஜியோ

இந்தியாவில் முதன்மையாக இணையச் சேவை வழங்கும் ஜியோ விரைவில் 5ஜியுடன் 6 ஆண்டில் நுழைகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்தியாவில் உலகத் தரத்தில் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையைத் தொடங்க உள்ளனர். இந்த நிலையில் ஜியோ 4ஜி சேவை தொடங்கி 5 ஆண்டுகள் கடந்து தற்போது அதிநவீன 5ஜி சேவையுடன் 6  ஆம் ஆண்டில் நுழைகின்றனர்.

    இந்தியாவில் இணையச் சேவையை முதன்மையாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ தனது 4ஜி சேவையைச் செப்டம்பர் 5, 2016ம் ஆண்டு தொடங்கியது. இதையடுத்து இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் பயனடையும் விதத்தில் டிஜிட்டல் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்தனர். டிஜிட்டல் இணையம் தொழிநுட்பத்தை நவீனப் படுத்தல் மூலம் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அளித்தது.

    தற்போது இந்தியாவில் 5ஜி சேவையை பான்- இந்தியா அமைப்பில் தொடங்கும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கின்றனர். மேலும் 4ஜி சேவைக்கு எந்த வித பாதிப்பும் இன்றி இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதே போல் 2016இல் 4ஜி சேவை தொடங்கியபோதும் 2ஜி மற்றும் 3ஜி சேவைகளுக்கு எந்த பாதிப்பும் இன்றி அனைவருக்குமான இணையச் சேவையாக ஜியோ தொடங்கப்பட்டது.

    கடந்த 18 மாதங்களில் மட்டும் முதற்கட்டமாக 2 லட்சம் கோடி ரூபாய் 5 ஜி சேவையை பான்-இந்திய அமைப்பில் தொடங்க செலவிடப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த திங்கள் அன்று நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 45ஆவது வருடாந்திர கூட்டத்தில் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி பேசுகையில், ஜியோ 4ஜி சேவைக்கான கட்டமைப்பு இந்தியாவில் முதன்மையாகச் செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது 5ஜி சேவையை உடனுக்குடன் மக்களுக்கு அளிப்பதற்குச் சாத்தியமானது என்று தெரிவித்தார். மேலும் ஜியோவின் சேவை மக்களுக்கு மலிவான விலையில் வழங்கப்படும் என்றும் கூறினார்.

    Also Read : செப்.1 முதல் அமலுக்கு வந்துள்ள விலைவாசி மாற்றங்கள் - சாமானிய மக்களுக்குப் பாதிப்பு உண்டா?

    6ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜியோ:

    ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி சேவையைத் தொடங்கி 6ம் ஆண்டு தொடங்கும் நிலையில் தற்போது 5ஜி சேவையைத் தொடங்கும் ஜியோ கடந்த ஆண்டுகளில் இந்தியாவில் பல டிஜிட்டல் புரட்சி செய்துள்ளனர்.

    ஜியோவில் மை ஜியோ, ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ சாவன், ஜியோ கிளவுட், ஜியோ சாட், ஜியோ ஹோம் என்று முக்கிய 6 செயலிகள் அறிமுகப்படுத்தினர். ஜியோ இணையச் சேவை, ஜியோ தொலைத்தொடர்பு சேவை, ஜியோ பைபர், ஜியோ ஸ்மார்ட்போன் மற்றும் ஜியோ போன் போன்றவற்றைத் தொடங்கினர். மேலும் இந்தியாவில் முதல் இலவச அன்லிமிடெட் பேசும் வசதியைத் தொடங்கியவர்கள் ஜியோ நிறுவனம்.

    இந்தியாவில் உள்ள தொலைதூர இடங்களான லடாக் பகுதியில் உள்ள பாங்காங் டிசோ ஏரி, மகாராஷ்டிராவில் உள்ள தடோபா போன்ற 6 இடங்களுக்கு முதல் முறை இணையம் சேவையை ஜியோ நிறுவனம் அளித்துள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Jio Browser, Jio Fiber, Reliance Jio

    அடுத்த செய்தி