ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இந்தியாவின் வலிமையான தொலை தொடர்பு நிறுவனம் ஜியோ - ஆய்வில் தகவல்

இந்தியாவின் வலிமையான தொலை தொடர்பு நிறுவனம் ஜியோ - ஆய்வில் தகவல்

ஜியோ

ஜியோ

Reliance Jio | இந்தியாவின் மிகப்பெரிய செல்போன் நெட்வொர்கhக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ உருவெடுத்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி அளவுக்கு செல்போன் சேவை வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட முன்னணி டெலிகாம் நிறுனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் செல்போன் நெட்வொர்க் வர்த்தகம் ஏற்றம் கண்டுதான் வருகின்றன. இதுவரை செல்போன் சேவை வழங்கும் பணியில் முன்னணி நிறுவனங்களாக இருந்த ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு டு இந்தியாவின் வெற்றிகரமான மற்றும் முன்னணி செல்போன் சேவை வழங்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ உருவெடுத்துள்ளது.

  TRA எனப்படும் Trust Research Advisory அமைப்பு இந்தியா முழுவதும் நடத்திய ஆய்வில் அதிகட்ச சந்தாரர்களோடு ஜியோ நிறுவனம் முன்னணி சேவை வழங்கும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது தெரியவந்துள்ளது. அதிக  வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் பிராண்டாக ஜியோ உள்ளதும் TRA நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

  இதே போல் பல்வேறு துறைகளிலும் TRA ஆய்வு மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வில் ஆடை விற்.னை துறையில் அடிடாஸ் அதிக வாடிக்கையார்கள் விரும்பும் பிராண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் நைக், ரேமண்ட்ஸ், ஆலன்சோழி மற்றும் பீட்டர் இங்கிலாண்ட் ஆகிய பிராண்டுகள் இடம் பிடித்துள்ளன.

  ஆட்டோமொபைல் துறையில் பிஎம்டபிள்யு முதலிடத்தையும் டொயோட்டா வாகனங்கள் இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளன. அடுத்தடுத்த இடங்களை ஹூண்டாய் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் பிடித்துள்ளன.

  மேலும் வங்கி நிதிச் சேவைப் பிரிவில் முதலிடத்தை பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியும், இரண்டாமிடத்தை பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியும் மூன்றாமிடத்தை தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியும் பிடித்துள்ளன.பன்முக சேவை வழங்கும் நிறுவனங்களில் ஐடிசி முதலிடத்தையும் டாடா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் முறையே இரண்டாம் மற்றுமு் மூன்றாம் இடங்களையும் பிடித்துள்ளன.

  Also Read : 2025-க்குள் இந்தியர்களுக்கும் விண்வெளி சுற்றுலா சாத்தியமாகும் - எப்படி தெரியுமா?

  எரிசக்தி துறையில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் முதலிடத்தையும், இந்தியன் ஆயில் கார்ப்பேரேசன் இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளன. உணவுப் பொருள், பானங்கள் உற்பத்தி மற்றும் விநியோகத்தை பொறுத்தவரை அமுல் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. நெஸ்கஃபே இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.

  உலகின் மிகவேகமாக வளரும் பொருளாதாரம் மற்றும் சந்தையாக இந்தியா திகழ்கிறது. எனவே, உணவு, அழகுசாதனப் பொருட்கள், எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள், ஆடை மற்றும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், சேவை வழங்கும் நிறுவனங்கள் என உலகின் முன்னணி நிறுங்கள் இந்தியாவில் தங்கள் வர்த்தகத்தை நிலைநிறுத்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

  கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் முன்னணி மற்றும் வளர்ந்த நாடுகளில் கூட பொருளாதாரம் மந்த நிலையை அடைந்த போதும் கூட இந்தியாவின் பொரளாதாரம் ஸ்திரமாக இருந்தது. அதோடு வரும் காலத்தில் மிக முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத உலக பொருளாதார நாடுகளில் இந்தியா மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என சர்வதே நிதி முகமை அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Jio, Reliance