ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

கேதர்நாத் யாத்திரை வழித் தடத்தில் மொபைல் நெட்வொர்க் சேவையைத் தொடங்கிய ஜியோ

கேதர்நாத் யாத்திரை வழித் தடத்தில் மொபைல் நெட்வொர்க் சேவையைத் தொடங்கிய ஜியோ

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பத்ரிநாத் - கேதர்நாத் மந்திர் சமிதி அமைப்பின் தலைவர் அஜேந்திர அஜய், கேதர்நாத் பாத யாத்திரை வழித் தடத்துக்கு ரிலையன்ஸ் ஜியோவின் மொபைல் மற்றும் இணைய சேவையைத் தொடங்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கௌரிகுந்த் மற்றும் இமயமலைக்கு இடைப்பட்ட வழியில் இணைய சேவை வழங்கும் முதல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில்களுக்கான புனித யாத்திரைப் பயணத்துக்கு செல்பவர்கள் தற்போது தங்களுக்கு விருப்பமானவர்களுடன் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் மூலம் தொடர்பில் இருக்கலாம்.

இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த ஆண்டு சார் தம் யாத்ராவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களுக்கு மொபைல் நெட்வொர்க்கில் மிகச் சிறந்த அனுபவத்தைக் கொடுப்பதற்காக ஜியோ அதனுடைய நெட்வொர்க்கை நீட்டித்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கேதர்நாத் யாத்திரை தடைபட்டிருந்தது. இமயமலை கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதற்கு தீவிரமாக உள்ளனர்.

முக்கியமான தளமான சோன்ப்ரயாக் பகுதி முழு திறன் கொண்ட டவர் நிறுவப்பட்டுள்ளது. கௌரிகுந்த் மற்றும் கேதர்நாத்துக்கு இடைப்பட்ட பகுதியில் 5 டவர்கள் நிறுவதற்கு திட்டமுள்ளது. சோட்டி லின்சோலி, லின்சோலி மற்றும் ருத்ராபாயிண்ட்டில் ஏற்கெனவே மூன்று டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. மீதமுள்ள இரண்டு டவர்கள் விரைவில் நிறுவப்படும்.

இந்தப் பாதையில் பயணிக்கும் யாத்ரிகளுக்கு தடையில்லா நெட்வொர்க் வசதி கிடைப்பதற்காக மொபைல் நெட்வோர் ஃபைபர் நெட்வொர்க் மூலம் வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Jio, Kedarnath