ஜியோ பைபர் செட்டாப் பாக்ஸைப் பயன்படுத்தும் ஜியோ ஃபைபர் பயனாகளுக்கு டிஜிட்டல் கற்றல் தளமான டாப்ஸ்காலர்ஸ் பிரத்யேகமாகக் கிடைக்கும் என்று ஜியோ அறிவித்துள்ளது.
ஜியோ ஃபைபர் சேவை குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜியோவின் செட்-டாப்-பாக்ஸானது, ஜியோவின் ஜியோ சினிமா, ஜியோசாவன் ஆகிய ஜியோவின் சொந்த முதன்மை சேவைகள் உள்ளிட்ட பல பிரபலமான ஆன்லைன் பொழுதுபோக்கு தளங்கள், ஜியோ ஃபைபர் பயனாளர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. தற்போது ஸ்மார்ட் லேர்னிங் ஆப் ஆன டாப்ஸ்காலர்ஸ் உடன் ஜியோ இணைந்து பொழுதுபோக்கு, விளையாட்டு, செய்தி, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றிக்கு ஒரு விரிவான பயனாளி அனுபவத்தைக் கொடுக்கிறது.
தி ஸ்மார்ட் லேர்னிங் ஆப்பான டாப்ஸ்காலர்ஸ் என்பது, மழலையர் கல்வி முதல் மேல் பட்டப்படிப்பு கல்வி வரை கற்றலை வழங்கிவரும் இந்தியாவின் முன்னணி கல்வி தொழில்நுட்ப நிறுவனமாக ஜாரோ குழுமத்தின் ஒரு உருவாக்கப் படைப்பு ஆகும். தனது வியத்தகு வீடியோ வீடியோ உள்ளடக்கம் மற்றும் கே.ஜி முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாக் டெஸ்ட்கள் மற்றும் ரிவிஷன் நோட்கள் போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கற்றல் சாதனங்கள் மூலம் விரிவான கற்றல் அனுபவத்தைக் கொடுபது செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான செயலியின் நோக்கமாகும். இது, கற்றல் அனுபவத்தை உருவாக்குவதற்கு கல்வி வல்லுநர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளின் கூட்டு முயற்சியாகும். ஜியோ செட்-டாப் பாக்ஸுடன் இணைந்திருப்பது டாப்ஸ்காலரை ஒரு பரந்த வாடிக்கையாளர்களிடையே சென்றடையச் செய்யும். ஜியோவுடன் கூட்டு ஏற்படுத்தியிருப்பதன் மூலம் டாப்ஸ்காலர்ஸானது ஜியோ செட் டாப் பாக்ஸ் சந்தாதாரர்களுக்கு முதல் 30 நாள்களுக்கு அளவற்ற பிரத்யேகப் பயன்பாட்டை வழங்குகிறது. இந்த ஆப், பள்ளிக்கூட பாடத்திட்டத்துடன் இணைந்த 6000-க்கும் மேற்பட்ட 2டி மற்றும் 3டி வீடியோ பாடங்களிலிருந்து பார்ப்பவர்களைக் கற்க அனுமதிக்கிறது.
டாப்ஸ்காலர்:
வரும் காலத்துக்கு கல்வி அமைப்பைக் கட்டமைக்கும் உறுதியான நம்பிக்கையோடு ஸ்மார்ட் கற்றல் செயலியான டாப்ஸ்காலர்ஸை ஜாரோ குழுமம் வழங்கிவருகிறது. கற்றலின் மூலம் ஆக்கப்பூர்வ தாக்கம் ஏற்படுத்துவதற்கும் அனுபவித்து மிகழக்கூடியதாக ஆக்குவதற்கும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒன்று இது. இந்தியாவின் முன்னணி கற்றல் ஆப்களில் ஒன்று. திறன்மிக்க ஆசிரியர்களின் மேற்பார்வையின் கீழ், சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் டாப்ஸ்காலர்ஸ், ஸ்மார்ட்டான தலைமுறையினருக்காக தனிப்பட்ட பிரத்யேகமாக்கப்பட்ட கற்றலை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.