நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் ஃப்ரீயா பாக்கணுமா ? அப்ப இந்த ஜியோ பிளான் ரீசார்ஜ் பண்ணுங்க..

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம்

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் இலவசமாக காண செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜியோ ரீசார்ஜ் பிளானில் எதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

  • Share this:
aரிலையன்ஸ் ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு போஸ்ட்பெய்ட் மற்றும்ப்ரீபெய்ட் திட்டங்களின் பல கூடுதல் நன்மைகளை வழங்கி வருகிறது. இந்த நன்மைகளில் ஹை-ஸ்பீட் டேட்டா மற்றும் பல்வேறு OTT ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான இலவச அணுகல் ஆகியவை அடங்கும். அதேபோல ஜியோ ப்ரீபெய்ட் யூசர்கள் சில ரீசார்ஜ் திட்டங்களுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் இலவச அணுகலை பெற முடியும்.

JioPostPaid Plus திட்டங்கள்:

டெல்கோ வழங்கும் ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்கள் அமேசான் பிரைம், நெட்ஃபிக்ஸ் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற மிகவும் பிரபலமான ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான இலவச சந்தாக்களை வழங்குகின்றன. இந்தியாவில் OTT இடத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்த மூன்று தளங்களை தவிர, ஜியோ அதன் சொந்த ஜியோ டிவி மற்றும் ஜியோசினிமா பண்டில் உள்ளடக்கத்திற்கான அணுகலையும் வழங்குகிறது. நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் உள்ளிட்ட மூன்று ஸ்ட்ரீமிங் விருப்பங்களுக்கும் அணுகலை வழங்கும் JioPostPaid ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து விரிவாக காணலாம்.

ரூ.399 திட்டம் :

வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் இந்த மலிவான JioPostPaid Plus ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் மூன்று ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கும் இலவச சந்தாக்களை பெற முடியும். இந்த திட்டம் 75GB டேட்டாவை அதிகப்பட்சமாக 200GB டேட்டா ரோல்ஓவரோடு வழங்குகிறது. 75GB டேட்டா வரம்பிற்குப் பிறகு, யூசர்கள் 1GB-க்கு ரூ.10 என்ற விலையில் டேட்டாவை வாங்க வேண்டும். இது அனைத்து ஜியோ போஸ்ட்பெய்டு திட்டங்களுக்கும் பொருந்தும். இந்தத் திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் தொகுக்கப்பட்ட அமேசான் பிரைம் வீடியோ சந்தா 1 வருடத்திற்கு செல்லுபடியாகும்.

ரூ.599 திட்டம் : இந்த திட்டம் பில்லிங் சுழற்சியில் அதிகப்பட்சம் 100 GB தரவையும், 200 GB அதிகபட்ச தரவு மாற்றம் செய்வதையும் வழங்குகிறது. கொடுக்கப்பட்ட வரம்பு தீர்ந்த பிறகு யூசரிடம் 1GB-க்கு ரூ.10 வசூலிக்கப்படும். மேலும், ஜியோபோஸ்ட்பெய்ட் இணைப்பைப் பயன்படுத்தி கூடுதல் குடும்ப உறுப்பினருடன் திட்டத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

ரூ.799 திட்டம்: பில்லிங் சுழற்சியில் அதிகப்பட்சமாக 150GB டேட்டாவை வழங்குகிறது மற்றும் 200GB டேட்டா ரோல்ஓவரையும் வழங்குகிறது. திட்டத்தின் பயன்களை குடும்ப திட்டத்தின் கீழ் 2 கூடுதல் போஸ்ட்பெய்ட் இணைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

ரூ. 999 திட்டம்: இந்த திட்டம் பில்லிங் சுழற்சிக்கு அதிகப்பட்சம் 200GB டேட்டாவை வழங்குகிறது மற்றும் குடும்பத் திட்டத்தின் கீழ் 3 கூடுதல் சிம் கார்டுகளை வழங்குகிறது. இதன் அதிகப்பட்ச டேட்டா ரோல்ஓவர் 500GB ஆகும்.

ரூ.1,499 திட்டம்: இந்த பட்டியலில் உள்ள மிக விலையுயர்ந்த திட்டம் பில்லிங் சுழற்சியின் போது 300 GB டேட்டாவை வழங்குகிறது மற்றும் யூசர்கள் அடுத்த பில்லிங் சுழற்சியில் அதிகபட்சம் 500 GB வரை எடுத்துச் செல்லலாம். இருப்பினும், குடும்பத் திட்டத்தின் கீழ் கூடுதல் சிம் கார்டுகளை இந்தத் திட்டம் வழங்காது.

ப்ரீபெய்ட் பயனர்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டாரை அணுகுவதற்கான சில ரீசார்ஜ் திட்டங்கள்:

ரூ. 2,599 திட்டம்: இந்த பேக்கின் வாலிடிட்டி 365 நாட்கள், ஒருநாளுக்கு 2GB மற்றும் கூடுதலாக 10GB என மொத்தம் 740 GB வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ், கூடுதல் நன்மையாக ரூ.399 மதிப்புள்ள 1 ஆண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக பெறலாம்.

ரூ. 598 திட்டம்: இந்த பேக்கின் வாலிடிட்டி 56 நாட்கள், ஒருநாளுக்கு 2GB என மொத்தம் 112 GB டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ், கூடுதல் நன்மையாக ரூ.399 மதிப்புள்ள 1 ஆண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக பெறலாம்.

Also read : "குட்டையை இப்படி தான் கிராஸ் பண்ணனும்".. பாடம் எடுத்துக்கொண்டே குட்டையில் விழுந்த நபர்- சிரிக்க வைக்கும் வீடியோ

ரூ.777 திட்டம்: இந்த பேக்கின் வாலிடிட்டி 84 நாட்கள், ஒருநாளுக்கு 1.5 GB என மொத்தம் 131 GB டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ், கூடுதல் நன்மையாக ரூ.399 மதிப்புள்ள 1 ஆண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக பெறலாம்.

ரூ. 401 திட்டம் : இந்த பேக்கின் வாலிடிட்டி 28 நாட்கள் ஆகும். நாளொன்றுக்கு 3 ஜிபி மற்றும் கூடுதலாக 6GB என மொத்தம் 90 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் நாளொன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது. கூடுதல் நன்மையாக டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் ரூ.399 மதிப்புள்ள 1 ஆண்டு சந்தாவை அணுகலாம்.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் செவ்வாயன்று அனைத்து பயனர்களுக்கும் தங்கள் திட்டங்களையும் விலை முறையையும் புதுப்பித்தது. இந்த மாற்றங்கள் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இலவச சந்தாவை பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: