ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ரூ.500க்கும் கீழ் ஜியோ வழங்கும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்

ஜியோ

ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) நெட்ஒர்க்குகளை காட்டிலும் ஜியோ ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் தினசரி ரீசார்ஜ் பேக்குகளை வழங்குகிறது.

  • Share this:
இந்த ஆண்டு தொடக்கத்தில், ஜியோவிலிருந்து நாட்டின் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் உள்நாட்டு அழைப்புகளை இலவசமாக மேற்கொள்ள அனைத்து பிந்தைய FUP அழைப்பு கட்டணங்களையும் ஜியோ நிறுவனம் ரத்து செய்தது. மேலும் ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) நெட்ஒர்க்குகளை காட்டிலும் ஜியோ ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் தினசரி ரீசார்ஜ் பேக்குகளை வழங்குகிறது. உதாரணத்திற்கு, ஜியோ தனது ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்துடன் 2 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. அதுவே ஏர்டெல் மற்றும் விஐ நெட்ஒர்க்குகள் 1.5 ஜிபி தினசரி டேட்டாவை அதே விலையில் வழங்குகின்றன. டெல்கோ வழங்கும் இந்த உயர்மட்ட திட்டங்களுக்கு இதே போன்று வேறு சில எடுத்துக்காட்டுகளும் இருக்கின்றன. சில ரீசார்ஜ் திட்டங்களில் ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு ஸ்ட்ரீமிங் நன்மைகளுடன் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலையும் வழங்குகிறது.

ஜியோ வழங்கும் பின்வரும் திட்டங்கள் ரூ.500 க்கு கீழ் உள்ளன. மேலும், இந்த திட்டங்கள் முறையே 1 ஜிபி, 2 ஜிபி மற்றும் 3 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகின்றன. இதில் சில திட்டங்கள் 28 நாட்கள் முதல் 56 நாட்கள் வரை செல்லுபடியாகிறது. மேலும் ரூ .401 ரீசார்ஜ் திட்டம், டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் விஐபி சந்தாவை வழங்குவதோடு 3 ஜிபி தினசரி டேட்டாவையும் வழங்குகிறது. டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் விஐபி சந்தாவை அணுகக்கூடிய ஜியோ யூசர்கள் ஏற்கனவே பயன்பாட்டில் வைத்துள்ள டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆப்பில் உள்நுழைந்து மீதமுள்ள தொகையை செலுத்துவதன் மூலம் அதன் பிரீமியம் சந்தாவையும் மேம்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில் ரூ.500க்கும் கீழ் உள்ள ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து காணலாம்.

ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்: ஜியோவின் இந்த திட்டம் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 24 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் வாலிடிட்டி 24 நாட்கள். இதன் பொருள் இந்த திட்டம் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் நாளொன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களுக்கு ஒரு சந்தாவையும் தருகிறது.

ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்: இதில் யூசர்கள் 1.5 ஜிபி தினசரி டேட்டாவை பெறுவர். மேலும் 28 நாட்களுக்கு இந்த திட்டம் செல்லுபடியாகும். வாலிடிட்டி முடியும் வரை வாடிக்கையாளர்கள் 42 ஜிபி டேட்டாவை பெறுவார்கள். இந்த திட்டம் ஜியோவிலிருந்து நாட்டின் எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் உள்நாட்டு அழைப்புகள் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான காம்ப்ளிமென்ட்ரி சந்தாவை வழங்குகிறது.

ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வரை செல்லுபடியாகும். ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா என்ற கணக்கில் மொத்தம் 56 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் டொமஸ்டிக் கால்ஸ் விருப்பத்தை வழங்குகிறது. இந்த திட்டம் ஜியோ பயன்பாடுகளுக்கான காம்ப்ளிமென்ட்ரி சந்தாவுடன் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் வழங்குகிறது.

ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்: இதன் வாலிடிட்டி 28 நாட்கள்.இந்த திட்டம் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் உள்நாட்டு அழைப்புகளுடன் வருகிறது. இது ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தாவையும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்-களையும் வழங்குகிறது.

ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த திட்டம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் வாலிடிட்டி 56 நாட்கள். இந்த திட்டம் அன்லிமிடெட் உள்நாட்டு அழைப்புகளுடன் வருகிறது. கூடுதலாக இலவச 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைக் வழங்குகிறது. இது Jio ஆப்களுக்கான சந்தாவையும் வழங்குகிறது.

ரூ.401 ப்ரீபெய்ட் திட்டம்: இதன் வாலிடிட்டி 28 நாட்கள். மொத்தம் 90 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதாவது  ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் கூடுதலாக 6 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் அன்லிமிடெட் கால்ஸ், ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தா மற்றும் ஓராண்டுக்கான டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு விஐபி சந்தாவை வழங்குகிறது. இதற்கு எந்த ஒரு கூடுதல் கட்டணமும் தேவையில்லை. 

ரூ.444 ப்ரீபெய்ட் திட்டம்: இதன் வாலிடிட்டி 56 நாட்கள். தினசரி 2 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு இலவச 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தா ஆகியவற்றையும் இந்த திட்டம் வழங்குகிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: