Home /News /technology /

நாளொன்றுக்கு 2GB டேட்டா, அன்லிமிட்டட் கால்ஸ்..! ஜியோவின் சூப்பர் பிளான்ஸ்

நாளொன்றுக்கு 2GB டேட்டா, அன்லிமிட்டட் கால்ஸ்..! ஜியோவின் சூப்பர் பிளான்ஸ்

ஜியோ ப்ரீபெய்ட் பிளான்கள்

ஜியோ ப்ரீபெய்ட் பிளான்கள்

ஜியோவில் ரூ.500-க்கு கீழ் ப்ரீபெய்ட் பிளான்களை கொடுக்கிறது. இதில் தினசரி 2GB டேட்டா யூஸர்களுக்கு வழங்கப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, பல நன்மைகளுடன் கூடிய ப்ரீபெய்ட் பிளான்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரூ.500-க்கு கீழ் சில ப்ரீபெய்ட் பிளான்களை கொண்டுள்ளது ஜியோ. இதில் தினசரி 2GB டேட்டா யூஸர்களுக்கு வழங்கப்படுகிறது.

    கூடுதலாக இந்த பிளான்களில் OTT சப்ஸ்கிரிப்ஷன், அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பெனிஃபிட்களும் இணைக்கப்பட்டுள்ளது. ரூ.500-க்குள் ஜியோ வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் பிளான்கள் பற்றிய இங்கே பார்க்கலாம். ரூ.500-க்குள் அல்லது சற்று கூடுதல் விலையில் கிடைக்கும் மற்றும் தினசரி 2GB டேட்டா லிமிட்டுடன் கூடிய ஜியோ பிளான்கள்.

    ரூ.249 பிளான்:

    ரூ.249-க்கு வழங்கப்படும் ஜியோவின் இந்த பிளான் 23 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த ப்ரீபெய்ட் பிளானை ரீசார்ஜ் செய்வதன் மூலம், தினசரி டேட்டா வரம்பு 2GB-யுடன் மொத்தம் 46GB டேட்டா பயன்பாட்டை யூஸர்கள் பெறலாம். இந்த பிளான் அன்லிமிட்டட் கால்ஸ், நாளொன்றுக்கு 100 SMS மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் உள்ளிட்ட ஜியோ ஆப்ஸ்களுக்கான ஃப்ரீ சப்ஸ்கிரிப்ஷன் உள்ளிட்டவை 23 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன.

    ரூ.299 பிளான்:

    ரூ.299-க்கு வழங்கப்படும் ஜியோவின் இந்த பிளான் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மேலும் ரூ.500-க்கு கீழ் உள்ள பிளான்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ப்ரீபெய்ட் பிளான்களில் ஒன்றாக இது இருக்கிறது. தினசரி 2GB டேட்டா லிமிட்டுடன் மொத்தம் 28 நாட்களுக்கு 56GB டேட்டா பெனிஃபிட்டுடன் வருகிறது. இந்த பிளான் அன்லிமிட்டட் கால்ஸ், நாளொன்றுக்கு 100 SMS மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் உள்ளிட்ட ஜியோ ஆப்ஸ்களுக்கான காம்ப்ளிமென்ட்ரி சப்ஸ்கிரிப்ஷனையும் ஜியோ வழங்குகிறது.

    Also Read : மீண்டும் நிலவை நோக்கி பயணம் - இரண்டாவது முறை ஏவத் தயாராகும் நாசாவின் ஆர்டெமிஸ் 1..

    ரூ.533 பிளான்:

    இந்த ப்ரீபெய்ட் பிளான் ரூ. 500-ஐ தாண்டினாலும் கூட 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. தினசரி 2GB டேட்டா லிமிட்டுடன் மொத்தம் 56 நாட்களுக்கு, 112GB டேட்டாவை வழங்குகிறது ஜியோ நிறுவனம். அதோடு இந்த பிளானில் அன்லிமிட்டட் கால்ஸ், நாளொன்றுக்கு 100 SMS மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் உள்ளிட்ட ஜியோ ஆப்ஸ்களுக்கான காம்ப்ளிமென்ட்ரி சப்ஸ்கிரிப்ஷன் உள்ளிட்டவை அடங்கும்.

    ஜியோ மட்டுமின்றி ஏர்டெல் மற்றும் விஐ போன்ற டெலிகாம் ஆபரேட்டர்களும் தினசரி 2GB மற்றும் அதற்கு மேற்பட்ட டேட்டா வரம்புடன் ரூ.500-க்குள் பல ப்ரீபெய்ட் பிளான்களை வழங்குகின்றனர். ரூ.179, ரூ.319, ரூ.359, ரூ.399 மற்றும் ரூ.499 உள்ளிட்ட 5 ப்ரீபெய்ட் பிளான்களுடன் ரூ.500-க்குள் 2GB தினசரி டேட்டா வரம்பை வழங்குகிறது ஏர்டெல்.
    Published by:Janvi
    First published:

    Tags: JioPhone, Prepaid, Reliance Jio

    அடுத்த செய்தி