Home /News /technology /

டிஸ்னி+ஹாட் ஸ்டார் சந்தாவுடன் IPL 2022ஐ பார்த்து மகிழ உதவும் Jio ப்ரீபெய்ட் பிளான்கள்..

டிஸ்னி+ஹாட் ஸ்டார் சந்தாவுடன் IPL 2022ஐ பார்த்து மகிழ உதவும் Jio ப்ரீபெய்ட் பிளான்கள்..

காட்சி படம்

காட்சி படம்

Jio Prepaid Plans : டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷனுடன் இணைந்த ஜியோவின் கிரிக்கெட் பிளான்கள்..

கிரிக்கெட் ரசிகர்களின் மாபெரும் திருவிழாவான ஐபிஎல் 2022 கடந்த மார்ச் 26ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழா மே மாதம் இறுதி வரை நடைபெற உள்ளது.

இதனிடையே நாட்டிலேயே முன்னணி டெலிகாம் நிறுவனமாக இருந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்தியன் பிரீமியர் லீக் 2022 திருவிழாவை ஆர்வமுடன் பார்த்து ரசித்து வரும் யூஸர்களுக்காக பல ப்ரீபெய்ட் பிளான்களை வழங்கி வருகிறது. இந்த வாடிக்கையாளர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன்ஸ், காலிங் மற்றும் டேட்டா பலன்களுடன் வரும் பிளான்களை ஜியோ கொண்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளை பார்த்து ரசிப்பதற்கென்று தனி பிளான்களை வாங்க அவசியமின்றி, ஜியோ வழங்கும் இந்த பிளான்களானது, யூஸர்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களில் ஐபிஎல் போட்டிகளை ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கின்றன. மேலும் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அனைத்து டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கன்டென்டையும் யூஸர்கள் பார்க்கலாம். யூஸர்களுக்கு பயனளிக்க கூடிய ஜியோவின் கிரிக்கெட் பிளான்ஸ் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

also read : நாளை இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ரெட்மி 10A - விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..
 

 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷனுடன் இணைந்த ஜியோவின் கிரிக்கெட் பிளான்கள்:

பேஸிக் கிரிக்கெட் பிளான் ரூ.499 என்ற விலையில் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த பிளானின் நன்மைகளுடன் நாளொன்றுக்கு 3GB டேட்டாவை வழங்குகிறது ரூ.601 என்ற விலையில் உள்ள பிளான்.

ரூ.799-க்கு வழங்கப்படும் ஜியோ பிளானில் ஒரு நாளைக்கு 2GB டேட்டா மற்றும் 56 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ரூ.1066 பிளானில் யூஸர்களுக்கு ஒரு நாளைக்கு 2GB டேட்டா மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. ரூ.2999 என்ற விலையில் வழங்கப்படும் வருடாந்திர பிளான் 365 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2.5GB டேட்டாவை வழங்குகிறது. மேலே நாம் பார்த்த பிளான்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை அடங்கும். அதே போல யூஸர்கள் ஏற்கனவே ஒரு நீண்ட கால மற்றும் கிரிக்கெட் பேக் அல்லாத பிளானை கொண்டிருந்தால், இப்போது Disney+ Hotstar நன்மைகளுக்கு மேம்படுத்தி கொள்ளும் வகையில் 2 டேட்டா திட்டங்களை டேட்டா ஆட்-ஆன் நன்மைகளுடன் (data add-on benefits) ஜியோ வழங்குகிறது.



also read : உங்கள் வீட்டிற்கு சிறந்த அன்லிமிடெட் WIFI பிளான்களை தேடுகிறீர்களா? விவரங்கள் இங்கே..

இதில் 55 நாட்களுக்கு 55GB டேட்டா (மொத்தம்) வழங்கும் ரூ.555 பிளான் மற்றும் 56 நாட்களுக்கு நாளொன்றுக்கு 1.5GB டேட்டா வழங்கும் ரூ.659 பிளான் அடக்கம்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷனுடன் கூடிய ஜியோ கிரிக்கெட் பிளான்கள்:

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷனுடன் வரும் சில பிளான்களையும் ஜியோ வழங்குகிறது. 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2GB டேட்டாவை வழங்கும் ரூ.1499 திட்டமும், 365 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3GB டேட்டாவை வழங்கும் ரூ.4199 பிளானும் இதில் அடங்கும். இந்த 2 பிளான்களும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷனுடன் வருகின்றன.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: IPL 2022, Jio

அடுத்த செய்தி