ரிலையன்ஸ் ஜியோவில் சவுதியைச் சேர்ந்த PIF ₹ 11,367 கோடி முதலீடு

Jio-PIF deal: ரிலையன்ஸ் ஜியோவில் 11-வது நிறுவனமாக PIF முதலீடு செய்கிறது

ரிலையன்ஸ் ஜியோவில் சவுதியைச் சேர்ந்த PIF ₹ 11,367 கோடி முதலீடு
ரிலையன்ஸ் ஜியோ
  • News18
  • Last Updated: June 18, 2020, 5:50 PM IST
  • Share this:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி பேஸ்புக் நிறுவனம் 9.99 சதவிகித பங்குகளை ₹ 43,574 கோடிக்கு வாங்கியது. அதனை தொடர்ந்து சில்வர் லேக், விஸ்டா ஈகுவிட்டி, ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர்., முபதலா ஆகிய நிறுவனங்கள் ஜியோவின் பங்குகளை வாங்கின.

சில்வர் லேக் நிறுவனம் மேலும் ஜியோவில் முதலீடு செய்தது. அதன் தொடர்ச்சியாக அபுதாபி முதலீட்டு நிறுவனம் ஜியோவின் 1.16 சதவிகித பங்குகளை ₹ 5683 கோடிக்கு வாங்கியது. 7 வாரங்களில் 7 பெரிய நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்தன.

அதன் தொடர்ச்சியாக ADIA, L Catterton ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்த நிலையில், சவுதி அரேபியாவின் PIF ₹ 11,367 கோடி மதிப்பிலான 2.32% பங்குகளை வாங்க உள்ளது.


ஜியோ முதலீடு விபரங்கள்


ரிலையன்ஸ் ஜியோவில் கடந்த ஏப்ரல் 22 தொடங்கி இதுவரை 11 பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இதன் மூலம் ₹ 1,15,693.95 கோடியை ஜியோ நிறுவனம் முதலீடாக திரட்டியுள்ளது.
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading