தீபாவளி சலுகை! ஜியோபோன் வெறும் ₹699-க்கு விற்பனை

தீபாவளி சலுகை! ஜியோபோன் வெறும் ₹699-க்கு விற்பனை
  • Share this:
தீபாவளி பண்டிகையையொட்டி ஜியோபோனின் விலை அதிரடியாக 699 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 1,500 மதிப்புள்ள ஜியோ போன் வெறும் 699 ரூபாய்க்கு கிடைக்கும்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜியோ போன் ₹1500 விலையில் அறிமுகமானது. 4ஜி வசதிகொண்ட இந்த போனில் ஸ்மார்ட்போனில் உள்ள அடிப்படை அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வாட்ஸ் அப் , பேஸ்புக், யூடியூப் போன்ற முன்னணி ஆப்களும் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு, எக்சேஜ்ச் ஆஃபர் மூலம் ₹501 செலுத்தி ஜியோபோன் வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, பழைய போனையும் ₹501யையும் செலுத்தி புதிய ஜியோபோனை பெறலாம்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, எந்த நிபந்தனையும் இன்று வெறும்₹699 மட்டும் செலுத்தி புதிய ஜியோபோன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பழைய போனை எக்சேஞ்ச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், இந்த சலுகையில் ₹700 மதிப்புக்கொண்ட டேட்டா சலுகையையும் வழங்குகிறது.

First published: October 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்