தீபாவளி ஆஃபரை மேலும் ஒரு மாதம் நீட்டித்த ஜியோ..!

KaiOS திறன் கொண்டு இயங்கும் ஜியோ போன், 2.4 இன்ச் டிஸ்ப்ளே, 512MB ரேம் ஆகியன சிறப்பம்சங்களாக உள்ளன.

தீபாவளி ஆஃபரை மேலும் ஒரு மாதம் நீட்டித்த ஜியோ..!
ஜியோ தீபாவளி ஆஃபர்
  • News18
  • Last Updated: November 4, 2019, 9:02 PM IST
  • Share this:
வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பால் ஜியோ நிறுவனம் தனது தீபாவளி ஆஃபரை மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜியோ நிறுவனம் பல ஆஃபர்களை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக அறிவித்திருந்தது. 1,500 ரூபாய் மதிப்புள்ள ஜியோ போன் ஆஃபரில் 699 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 693 ரூபாய் மதிப்புள்ள டேட்டா ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக 99 ரூபாய்க்கு ஜியோ இலவச டேட்டா தருகிறது.

இந்த கூடுதல் ரீசார்ஜ் பேக் 7 முறை அளிக்கப்படும் என்றும் சலுகை வழங்கியிருந்தது ஜியோ. வாடிக்கையாளர்கள் இத்திட்டங்களுக்கு அளித்த வரவேற்பால் நவம்பர் 30-ம் தேதி வரையில் இந்த ஆஃபரை நீட்டிப்பதாக ஜியோ அறிவித்துள்ளது.


KaiOS திறன் கொண்டு இயங்கும் ஜியோ போன், 2.4 இன்ச் டிஸ்ப்ளே, 512MB ரேம் ஆகியன சிறப்பம்சங்களாக உள்ளன. 2,000mAh பேட்டரி உடன் வைஃபை இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. ஜியோ போன் உடன் கூகுள் அசிஸ்டென்ட் சேவை இணைப்பும் உள்ளது. கூடுதலாக ஃபேஸ்புக், கூகுள் மேப்ஸ், வாட்ஸ்அப், யூட்யூப் ஆகிய சேவை இணைப்பும் கிடைக்கும்.

மேலும் பார்க்க: இனி அமேசான் மூலமாகவும் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்யலாம்..!

திருவள்ளுவருக்கு காவி உடை... சர்ச்சையை ஏற்படுத்திய தமிழக பாஜக..!
First published: November 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்