முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / JIO : அதிரடி சலுகை! ஜியோபோன் வாடிக்கையாளர்கள் கொரோனா காலத்தில் ரீசார்ஜ் பண்ணாமலே இலவசமாக பேசலாம்..

JIO : அதிரடி சலுகை! ஜியோபோன் வாடிக்கையாளர்கள் கொரோனா காலத்தில் ரீசார்ஜ் பண்ணாமலே இலவசமாக பேசலாம்..

 ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ஜியோபோன் வாடிக்கையாளர்கள் எந்தவொரு ரீசார்ஜ் திட்டத்தை வாங்கினாலும், கூடுதலாக அதே மதிப்பிலான பிளான் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அடித்தட்டு மக்களுக்கு உதவிடும் வகையில் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்கள் இலவச அழைப்புகள் மேற்கொள்ளும் வகையில் அதிரடி சலுகையை ஜியோ அறிவித்துள்ளது. இதற்காக ரிலையன்ஸ் அறக்கட்டளையுடன் ஜியோ நிறுவனம் கைகோர்த்துள்ளது.

பெருந்தொற்று காலம் முழுதும் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில் இரண்டு அட்டகாசமான சலுகைகளை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி பெருந்தொற்று காலம் நீடிக்கும் வரை ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 300 நிமிடங்கள் இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இது ஜியோவினுடைய முதல் ஆஃபர்.

இரண்டாவதாக ஜியோபோன் வாடிக்கையாளர்கள் எந்தவொரு ரீசார்ஜ் திட்டத்தை வாங்கினாலும், கூடுதலாக அதே மதிப்பிலான பிளான் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

இது குறித்து ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு இந்தியனுக்கும் டிஜிட்டல் வாழ்க்கை சாத்தியமாக வேண்டும் என்ற இலக்குடன் ஜியோபோன் தொடங்கப்பட்டது. இந்த நெருக்கடியான கொரோனா காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் குறிப்பாக சமுதாயத்தின் கடைநிலையில் இருப்பவர்கள், தொலைதொடர்பில் இணைந்திருப்பதும், மலிவாக அது கிடைப்பதையும் ரிலையன்ஸ் உறுதி செய்கிறது.

Read More:     Iron Dome system : ராக்கெட் தாக்குதலிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்கும் கண்ணுக்கு தெரியாத அரண்!

இதற்காக பெருந்தொற்று காலம் முழுதுக்குமான இரண்டு பிரத்யேக திட்டங்களை ஜியோ அறிவித்துள்ளது. அதன்படி,

1. ரிலையன்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்திருக்கும் ஜியோ, இந்த பெருந்தொற்று காலம் முழுவதும், ரீசார்ஜ் செய்ய இயலாத நிலையில் இருக்கும் ஜியோபோன் வாடிக்கையார்களுக்கு தினமும் 10 நிமிடங்கள் என்ற அடிப்படையில் மாதம் ஒன்றிற்கு 300 இலவச நிமிடங்களை தருகிறது.

2. அதே போல ஒவ்வொரு ரீசார்ஜ் திட்டத்தையும் வாங்கும் போது அதே மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தை இலவசமாக வழங்கப்படும். அதாவது 75 ரூபாய்க்கு ஜியோபோன் வாடிக்கையாளர் ரீசார்ஜ் செய்தால், அவருக்கு கூடுதலாக 75 ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ் வழங்கப்படும்.

இந்த சவாலான காலகட்டத்தில் ஒவ்வொரு இந்தியனுடனும் துணை நிற்க ரிலையன்ஸ் உறுதிபூண்டுள்ளது, மற்றும் சக குடிமக்கள் சிரமங்களை சமாளித்து சகஜ நிலைக்கு திரும்ப எல்லா முயற்சிகளையும் நாங்கள் எங்களால் ஆன முயற்சிகளை எடுப்போம் என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Jio, JioPhone, Mukesh ambani, Recharge Plan, Reliance Digital, Reliance Foundation, Reliance Jio