ஐ.பி.எல் போட்டியைக் காண ஜியோவின் அதிரடி ஆஃபர் - 10 ஜிபி இலவசம் + ஓராண்டு ஹாட்ஸ்டார் சந்தா!

ஐ.பி.எல் போட்டியைக் காண ஜியோவின் அதிரடி ஆஃபர் - 10 ஜிபி இலவசம் + ஓராண்டு ஹாட்ஸ்டார் சந்தா!

ஜியோ

ஐ.பி.எல் தொடர் தொடங்க உள்ள நிலையில், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக புதிய ஆஃபர் மற்றும் ரீச்சார்ஜ் திட்டங்களை ஜியோ அறிவித்துள்ளது.

  • Share this:
ஜியோவின் ஐ.பி.எல் 2021-ம் ஆண்டுக்கான ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் திட்டத்தில் புதிய சலுகைகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 401 ரூபாய் ப்ரீப்பெய்ட் திட்டத்தினை ரீச்சார்ஜ் செய்தால் நாள்தோறும் 3ஜிபி டேட்டா கொடுக்கப்படுவதுடன், கூடுதலாக 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 30 நாள் வேலிட்டிட்டியில் கொடுக்கப்படும் இந்த திட்டத்தில் மொத்தமாக 96 ஜிபி வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வழங்குகிறது.

10 ஜிபி இலவச டேட்டா

2021-ம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் தொடர்களை கண்டுகளிக்க 10 ஜிபி இலவச டேட்டாவுடன், ஓராண்டுக்கான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் சந்தாவையும் கொடுக்கிறது. இந்த சலுகையானது குறிப்பிட்ட ஜியோ ப்ரீப்பெய்ட் திட்டங்களில் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக ஜியோ நிறுவனம் கொடுக்கிறது. மேலும், பிரத்யேகமாக கிரிக்கெட் செயலி ஒன்றை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோவை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மட்டும் இந்த செயலி இலவசமாக கிடைக்கும். இந்த செயலியில் ஜியோ யூசர்கள் இலவசமாக கிரிக்கெட் ஸ்கோரை தெரிந்து கொள்வதுடன், அதில் நடத்தப்படும் புதிர் விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை வெல்லலாம்.

ஜியோவின் ரூ.401 திட்டம்

ஐ.பி.எல் போட்டியை மக்கள் கண்டுகளிக்கும் விதமாக ஜியோ ப்ரீப்பெய்ட் யூசர்களுக்காக அந்நிறுவனம் 401 ரூபாயில் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், இந்த திட்டத்தினை ரீச்சார்ஜ் செய்தால் நாள்தோறும் 3ஜிபி டேட்டா கொடுக்கப்படுவதுடன், கூடுதலாக 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 30 நாள் வேலிட்டிட்டியில் கொடுக்கப்படும் இந்த திட்டத்தில் மொத்தமாக 96 ஜிபி வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வழங்குகிறது. மேலும், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் நாள்தோறும் 100 எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளலாம். மேலும், ஓராண்டுக்கு ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவும், ஜியோ தொலைக்காட்சி மற்றும் சினிமா ஆகியவற்றையும் கண்டுகளிக்கலாம்.

ஜியோவின் ரூ.2,599 திட்டம்

2,599 ரூபாய் ப்ரீப்பெய்ட் ரீச்சார்ஜ் திட்டத்தில் 10 ஜிபி இலவசமாக வழங்கப்படுகிறது. நாள்தோறும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை அனைத்து நெட்வொர்குகளுக்கும் அன்லிமிட்டெடாக கொடுக்கப்படுகிறது. மொத்தம் 365 நாட்கள் (12 மாதங்கள்) வேலிடிட்டி கொண்ட இந்த ப்ரீப்பெய்ட் திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் ஓராண்டுக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

ஜியோவின் ரூ.598 திட்டம்

598 ரூபாய் ஜியோ ப்ரீப்பெய்ட் திட்டத்தில் நாள்தோறும் 2 ஜிபி டேட்டாவுடன், அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா வழங்கப்படுவதில்லை. ஆனால், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை ஓராண்டுக்கு இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

ஜியோவின் ரூ.777 திட்டம்

777 ரூபாய் ஜியோ ப்ரீப்பெய்ட் திட்டத்தில் நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ் 84 நாட்கள் வேலிடிட்டி அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. ஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக கொடுக்கப்படுவதால் யூசர்கள் இந்த திட்டத்தில் கிரிக்கெட் மேட்சுகளையும் இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.
Published by:Ram Sankar
First published: