வாடிக்கையாளர்களின் நலன் கருதி புதிய ப்ரீபெய்டு திட்டத்தை ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான கட்டணம் ரூ.259 ஆகும். இதில், தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் காலிங் மற்றும் இதர பலன்கள் கிடைக்கும்.
நாட்டிலேயே மிகப் பெரிய டெலிகாம் ஆப்பரேட்டராக இருக்கும் ஜியோ, காலண்டர் மாத வேலிடிட்டி திட்டமாக இதை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களை போலவே, ரீசார்ஜ் செய்த அதே தேதியில் அது தானாகவே ரினீவ் ஆகி விடும். இதுகுறித்து ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரூ.259 கட்டணத்தில் உள்ள திட்டம் பிரத்யேகமானது. இந்த புதுமையான திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் ஒரேயொரு ரீசார்ஜ் தேதியை நினைவு வைத்திருந்தால் போதுமானது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு மற்றுமொரு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரே சமயத்தில் நீங்கள் பலமுறை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். உங்கள் ரீசார்ஜ் ஆட் ஆன் ஆகிக் கொண்டே போகும். ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் வேலிடிட்டி நிறைவடைந்த பிறகு, அது ஆடோமேடிக்காக ரினீவல் ஆகி விடும்.
யாரெல்லாம் இதில் பலன் அடைய முடியும்
ஏற்கனவே உள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் அனைவருமே இந்தத் திட்டத்தின் கீழ் பலன் பெற முடியும். தினசரி வாடிக்கையாளர்கள் 1.5 ஜிபி டேட்டாவை அதிவேகத்தில் பெற முடியும். அதற்குப் பிறகு இன்டர்நெட் வேகம் 64 கேபிபிஎஸ் வேகத்திற்கு குறைந்து விடும்.
வாடிக்கையாளர்கள் அனைத்து நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கும் அன்லிமிடெட் கால் செய்ய முடியும். நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். இது மட்டுமல்லாமல் ஜியோ ஆப்ஸ்களுக்கு இலவச சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும்.
Also Read : ஃபேஸ்புக், யூடியூப்புக்கு வருகிறது மிகப்பெரிய சவால்... சீன ஆப் அதிரடி
ஜியோ ரூ.299 ப்ரீபெய்டு திட்டம்
வாடிக்கையாளர்களுக்கு ரூ.299 கட்டணத்தில் மற்றொரு ப்ரீபெய்டு திட்டத்தை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இதன் மூலமாக அன்லிமிடெட் காலிங் வசதி மற்றும் அனைத்து நெட்வொர்க்களுக்கு தினசரி 100 எஸ்எம்எஸ் போன்றவற்றை நீங்கள் பெற முடியும். ஆனால், இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் மட்டுமே. இது காலண்டர் மாத வேலிடிட்டி திட்டம் போல வராது. அதே சமயம், தினசரி நீங்கள் 2 ஜிபி டேட்டா பயன்படுத்துபவர் என்றால், உங்களுக்கான சிறந்த திட்டமாக இது இருக்கும்.
Also Read : நெட்பிளிக்ஸ் இலவசமாக வேண்டுமா - ஏர்டெல்லின் அசத்தலான 2 பிளான்கள்
ஒருவேளை நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா போதுமானது இல்லை என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், ரூ.419 கட்டண திட்டத்திற்கு நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் உங்களுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.