Home /News /technology /

ஜியோவில் 10-வது முதலீட்டாளராக இணைந்தது எல்.கேட்டர்டன் - ₹1894.5 கோடி முதலீடு

ஜியோவில் 10-வது முதலீட்டாளராக இணைந்தது எல்.கேட்டர்டன் - ₹1894.5 கோடி முதலீடு

ஜியோ

ஜியோ

Jio-L Catterton deal: உலகின் மிகப்பெரிய நுகர்வோர் மையமாக இருக்கும் தனியார் ஈக்விட்டி நிறுவனமான எல் கேட்டர்டன், ஜியோ நிறூவனத்தின் 0.39 சதவீத பங்குகளை, ரூ .1,894.50 கோடிக்கு வாங்கியது.  இது கடந்த ஏழு வாரங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) டிஜிட்டல் பிரிவில் நடக்கும் பத்தாவது முதலீடாகும்.

மேலும் படிக்கவும் ...
  எண்ணெய் - சில்லறை விற்பனை - தொலைத் தொடர்பு நிறுவனமாக வளர்ந்த ரிலையன்ஸ் குழுமம், தற்போது ஜியோ தளத்தில் 22.38 சதவீத பங்குகளை விற்று, உலகின் சிறந்த தொழில்நுட்ப முதலீட்டாளர்களிடமிருந்து ரூ. 104,326.65 கோடியை ஈட்டியுள்ளது.

  அந்த வகையில், ஜியோ பிளாட்ஃபார்ம்களில் முன்னணி நுகர்வோர் பிராண்டுகளில் 200 க்கும் மேற்பட்ட முதலீடுகளைச் செய்த எல் கேட்டர்டனின் முதலீடு ரூ .4.91 லட்சம் கோடி பங்கு மதிப்பீட்டிலும், நிறுவன மதிப்பீடு ரூ .5.16 லட்சம் கோடியாகவும் உள்ளது.

  தனியார் ஈக்விட்டி நிறுவனமான டிபிஜி 0.93 சதவீத பங்குகளுக்கு ரூ .4,546.80 கோடியை முதலீடு செய்த இரண்டு மணி நேரத்திற்குள் இந்த டீல் நடந்தேறியிருக்கிறது.

  வரலாறு படைத்த நிதியுயர்த்தல் டீல்கள்

  திரைப்படங்கள், செய்தி மற்றும் இசை செயலிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ இன்ஃபோகாம் ஆகியவற்றை இயக்கும் ஜியோவில் தொடர்ச்சியான முதலீடுகள் நடந்துவருகிறது.

  ஏப்ரல் 22 அன்று, பேஸ்புக் நிறுவனத்திற்கு 9.99 சதவீத பங்குகள் ரூ .43,574 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.

  அப்பொழுது தொடங்கி, ஜெனரல் அட்லாண்டிக், சில்வர் லேக் (இரண்டு முறை), விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், கே.கே.ஆர், முபாதலா முதலீட்டு நிறுவனம் மற்றும் ஏ.டி.ஐ.ஏ மற்றும் டி.பி.ஜி ஆகிய நிறுவனங்கள் ஜியோவில் வரிசையாக தங்கள் முதலீடுகளைச் செய்துள்ளன.

  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி கூறுகையில், “இந்தியாவில் டிஜிட்டல் திறனை வளர்க்கும் எங்கள் பயணத்தில், எல் கேட்டர்டனை ஒரு பங்குதாரராக வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன், அதே நேரத்தில் உலகின் சிறந்த நுகர்வோர் பயன்பாட்டின் முழுமையை வழங்கி, நுகர்வோர் மையமாகக் கொண்ட வணிகத்தை உருவாக்குவதில் எல் கேட்டர்டனின் விலைமதிப்பற்ற அனுபவத்தை மதிக்கிறேன். சிறந்த டிஜிட்டல் தலைமையை அடைய இந்தியாவைத் தூண்டுவதற்கு தொழில்நுட்பமும் நுகர்வோர் அனுபவமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

  எல் கேட்டர்டனின் உலகளாவிய இணை தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் சூ கூறுகையில், “எங்களின் 30 ஆண்டுகளுக்கும் மேலான வணிக வரலாற்றில், சில்லறை விற்பனையாளர்கள், ஆம்னி-சேனல் மற்றும் டிஜிட்டல் பிராண்டுகள். தயாரிப்பு மேம்பாடு, மேம்பட்ட டிஜிட்டல் திறன் நிறுவனங்கள் மற்றும் யுக்தி ரீதியான கூட்டணிகளின் வணிகக் கட்டுமானத்துக்கு மிகச் சிறந்த ஆதரவாளர்களாக திகழ்ந்திருக்கிறோம். ஜியோவுடனான இந்த கூட்டணியை  மிகுந்த நல் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியிருக்கிறோம்.  நாட்டின் டிஜிட்டல் திறனை மாற்றுவதற்கும், ஒப்பிடமுடியாத டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப திறன்களின் மூலம் 1.3 பில்லியன் இந்தியர்களுக்கு டிஜிட்டல் இணைப்பை உருவாக்குவதற்கும் தனித்துவமாக ஜியோ தளம் கட்டமைப்பட்டதாக உணர்கிறோம்” என்று கூறியுள்ளார்.

  ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் என்பது அடுத்த தலைமுறை தொழில்நுட்ப தளமாகும். இது இந்தியா முழுவதும் உயர்தர மற்றும் மலிவு விலை டிஜிட்டல் சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது, கிட்டத்தட்ட 400 மில்லியன் சந்தாதாரர்கள் ஜியோ தளத்துக்கு இருக்கிறார்கள். ஜியோ இயங்குதளங்கள் அதன் டிஜிட்டல் சூழல் அமைப்பு முழுவதும் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளன. பிராட்பேண்ட் இணைப்பு, ஸ்மார்ட் சாதனங்கள், கிளவுட் மற்றும் எட்ஜ் கம்ப்யூட்டிங், பெரும் தரவு பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் ஆகியவற்றில் முக்கிய முதலீடுகளைச் செய்துள்ளது.

  எல் கேட்டர்டன் நிறுவனத்தைப் பற்றி..

  எல் கேட்டர்டன் நிறுவனம், உலகெங்கிலும் உள்ள முன்னணி நுகர்வோர் மைய பிராண்டுகளுக்கு பங்கீட்டாளராக செயல்பட்டு வரும் நிறுவனமாகும். அதன் செயல்முறை நிபுணத்துவம், ஆழமான துறை நுண்ணறிவு, உலகளாவிய அகன்ற நெட்வொர்க் மற்றும் எல்விஎம்ஹெச் மற்றும் குரூப் அர்னால்டுடனான அதன் தனித்துவமான கூட்டுறவு ஆகியவற்றின் 30 ஆண்டுகால வரலாற்று சாதனையுடன், சில புதுமையான பிராண்டுகளை முன்னணியில் உருவாக்க உதவிய பெருமையைக் கொண்டது.

  PE நிறுவனமான இது, உலக அளவில் 17 அலுவலகங்களையும், ஏழு நிதி உத்திகளில் சுமார் 20 பில்லியன் டாலர் பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது.

  ஜியோவில் டி.பி.ஜி நிறுவனம் ரூ.4,546 கோடி முதலீடு: ஏழு வாரத்தில் ரூ.1 லட்சம் கோடி திரட்டிய ரிலையன்ஸ்

  கேட்டர்டன், எல்விஎம்ஹெச் மற்றும் குரூப் அர்னால்ட் ஆகிய நிறுவனங்களின் கூட்டுழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது எல் கேட்டர்டன் நிறுவனம்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
   
  Published by:Gunavathy
  First published:

  Tags: Jio Facebook Deal, Reliance Jio

  அடுத்த செய்தி