4 ஜி சேவை வழங்குவதில் முதலிடம் பிடித்த ஜியோ!

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை Ookla நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Web Desk | news18
Updated: February 13, 2019, 8:53 AM IST
4 ஜி சேவை வழங்குவதில் முதலிடம் பிடித்த ஜியோ!
ஜியோ நிறுவனம்
Web Desk | news18
Updated: February 13, 2019, 8:53 AM IST
இந்தியாவில் 4ஜி சேவை வழங்குவதில் ஜியோ நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. நாட்டின் 98.8 சதவீத இடங்களுக்கு 4ஜி சேவையை ஜியோ நிறுவனம் வழங்கியிருப்பது Ookla நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 15 முன்னணி நகரங்களில் 4ஜி சேவையை வழங்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் குறித்து Ookla நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பகுதிகளில் 98.8 சதவீத இடங்களுக்கு சேவை வழங்கி ஜியோ நிறுவனம் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், 90 சதவீதமும், வோடபோன் டெலிகாம் நிறுவனம் 84.6 சதவீதமும், ஐடியா நிறுவனம் 82.8 சதவீதமும் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆய்வறிக்கையில் கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இணைய வேகம் தொடர்பான ஆய்வில் ஜியோ நிறுவனம் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் அதிகபட்சமாக 11.23 Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கி முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, வோடபோன் நிறுவனம், 9.13 Mbps வேகத்திலும், ஜியோ நிறுவனம் 7.11 Mbps வேகத்திலும் சேவை வழங்கின.


5ஜி சேவை வழங்கும் வரை வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவை அதிவேகமாக கிடைப்பதற்கான வழிவகைகளை செய்ய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே போட்டி இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் Ookla நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also see... பாமக VS விசிக.. திமுக அணியில் இடம் யாருக்கு?
First published: February 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...