• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Jio: உலகின் வலிமையான தொலைத் தொடர்பு பிராண்டாக மாறிய ரிலையன்ஸ் ஜியோ - பிராண்ட் ஃபைனான்ஸ் அறிக்கை!

Jio: உலகின் வலிமையான தொலைத் தொடர்பு பிராண்டாக மாறிய ரிலையன்ஸ் ஜியோ - பிராண்ட் ஃபைனான்ஸ் அறிக்கை!

ஜியோ

ஜியோ

இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ, இந்தியாவில் இருக்கும் அனைத்து பிராண்டுகளையும் கீழிறக்கி முதலிடத்தில் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Share this:
டெலிகாம் மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, இந்தியாவின் வலுவான பிராண்ட் (strongest brand) என்று பிராண்ட் ஃபைனான்ஸின் (Brand Finance) இந்திய பிராண்டுகள் குறித்த சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராண்ட் ஃபைனான்ஸ் 2021 அறிக்கையின்படி, ரிலையன்ஸ் ஜியோ 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் வலுவான பிராண்டாக தரப்படுத்தப்பட்டுள்ளது. பயனர் நம்பிக்கை, முதலீட்டாளர் நம்பிக்கை மற்றும் ஒட்டுமொத்த வணிக செயல்திறன் உள்ளிட்டவற்றின் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ, இந்தியாவில் இருக்கும் அனைத்து பிராண்டுகளையும் கீழிறக்கி முதலிடத்தில் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பிராண்ட் ஃபைனான்ஸ் அறிக்கையின் படி, இந்தியாவில் மட்டுமின்றி உலகின் வலிமையான தொலைத் தொடர்பு பிராண்டாக ஜியோ இருக்கிறது. இந்தியாவில் அதன் தொலைத் தொடர்பு போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது புதுமை, நற்பெயர், பரிந்துரை, வாடிக்கையாளர் சேவை மற்றும் பணத்திற்கான மதிப்பு ஆகியவற்றில் ஜியோ அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இது இந்தியாவின் தொழில்நுட்ப இடத்தில் முன்னணி நிறுவனமாக ஜியோ ஒரு தனித்துவமான நிலையில் உள்ளதை காட்டுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த 2020-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவின் இரண்டாவது வலுவான பிராண்டாக இருந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஜியோ, தற்போது ஒருபடி மேலே உயர்ந்து முதலிடம் பிடித்து டெலிகாம் மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2016-ஆம் ஆண்டில் தான் துவக்கப்பட்ட நிறுவனம் என்றாலும் விரைவில் இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டராகவும், உலகின் மூன்றாவது பெரிய மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டராகவும் ஜியோ மாறியுள்ளது. தற்போது வரை கிட்டத்தட்ட 400 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது ஜியோ.

Also read... வாட்ஸ்அப்பில் 3 புதிய அப்டேட்டுகள் - என்னென்ன தெரியுமா?

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஏராளமான மலிவு மற்றும் இலவச திட்டங்களுக்கு பெயர் பெற்ற ஜியோ, இந்திய டெலிகாம் துறையில் ஏற்படுத்திய புரட்சி 'ஜியோ எஃபெக்ட்' என்று அழைக்கப்படுகிறது. 200 முதல் 500 எம்பி டேட்டாவை 1 மாதத்திற்கு பார்த்து பார்த்து பயன்படுத்திய நிலையில், இன்று ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 முதல் 4 ஜிபி டேட்டா வரை வடிக்கையாளர்கள் பயன்படுத்த முக்கிய காரணம் இந்த ஜியோ எஃபெக்ட் தான் என்றால் மிகையாகாது. மில்லியன் கணக்கான பயனர்களுக்கு 4 ஜி இலவசமாக வழங்கியதுடன், ஒரே நேரத்தில் இந்தியர்கள் இணையத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை மாற்றியமைத்தது. ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் தனது ஆதிக்கத்தை யூஸர் ஸ்பேசில், வாடிக்கையாளர்களை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது, மேலும் வலுவான, தொடர்ச்சியான முதலீட்டாளர் ஆர்வத்துடன் உள்ளது.

இந்தியாவில் சந்தைப் பங்கின் அடிப்படையில் மிகப்பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டர், பின்னர் முழு தொழில்நுட்ப இடத்திலும் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மார்க்கெட் ஷேர் அடிப்படையில் ஜியோ மிகப் பெரியது. முழு தொழில்நுட்ப இடத்திலும் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது.`பிராண்ட் வலிமை என்பது பிராண்ட் மதிப்பின் கீ டிரைவர்ஸ்களில் (key drivers) ஒன்றாக இருப்பதால், ஜியோ இந்த ஆண்டு இந்தியாவில் முதல் 10 மதிப்புமிக்க பிராண்டுகளில் (valuable brands) முதலாவதாக இடம் பெற்றுள்ளது.

ஜியோ பிளாட்ஃபார்ம்களுடன், நிறுவனம் AI போன்ற துறைகளில் இந்திய நிறுவனங்களின் தொழில்நுட்பங்கள், ஜியோமீட், ஜியோ பேஜஸ் போன்ற சேவைகள் மற்றும் கேமிங் முயற்சிகள் போன்றவற்றில் முன்னோடியாக இருக்கும் வகையில் செயல்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவில் நுகர்வோர் 5 ஜி சேவைகளை (premiere consumer 5G services) பிரீமியர் செய்த முதல் இந்திய தொலைத் தொடர்பு ஆபரேட்டர் ஜியோ ஆகும். ஜியோ 5 ஜி சேவை இந்தியாவில் முழுமையாக உருவாக்கப்பட உள்ளது, மேலும் புதிதாக இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கட்டமைக்கப்பட்ட உள்ளது. இது தொடர்பாக பிராண்ட் ஃபைனான்ஸின் மதிப்பீட்டு இயக்குனர் சவியோ டிசோசா கூறுகையில்,"ஜியோ பிராண்டுக்கு என்று டெலிகாம் துறையில் பெரிய பலவீனங்கள் எதுவும் இல்லை, உலகளவில் பல தொலைத் தொடர்பு பிராண்டுகளைப் போலல்லாமல், ஜியோ தனித்துவமாக செயலாற்றி வாடிக்கையாளர்களிடம் இருந்து உண்மையான ஆதரவை பெற்றுள்ளது” என்று கூறினார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: