ஒரே மாதத்தில் 1 கோடி வாடிக்கையாளர்களை பெற்ற ஜியோ; ஏர்டெல்லுக்கு கிடைத்த ஆறுதல்!

இந்தியா முழுவதும் வயர்லெஸ் சந்தாததாரர்கள் எண்ணிக்கை 118 கோடியே 19 லட்சமாக இருக்கிறது.

Web Desk | news18
Updated: March 22, 2019, 10:32 PM IST
ஒரே மாதத்தில் 1 கோடி வாடிக்கையாளர்களை பெற்ற ஜியோ; ஏர்டெல்லுக்கு கிடைத்த ஆறுதல்!
இந்திய டெலிகாம் நிறுவனங்கள்
Web Desk | news18
Updated: March 22, 2019, 10:32 PM IST
ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் இணைந்திருக்கின்றனர்.

இந்திய டெலிகாம் நிறுவனங்கள் இடையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ.  டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2019 ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையை சுமார் 29 கோடி பேர் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில் பொதுத் துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் 9,86,681 வாடிக்கையாளர்களை சேர்த்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.


சென்ற ஆண்டு வரை இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்து வந்த ஏர்டெல் ஜனவரி மாதம் 1,03,389 வாடிக்கையாளரை பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆனால் பிராட்பேண்ட் சேவையில் ரிலையன்ஸ் ஜியோவை விட அதிக வாடிக்கையாளர்கள் ஏர்டெல் முதல் முறையாக பெற்றுள்ளது அவர்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.

இதே ஜனவரி மாத காலகட்டத்தில் டாடா டெலிசர்வீசஸ் 8,47,925 வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ள வோடாஃபோன் ஐடியா 35 லட்சம் வாடிக்கையாளரை இழந்துள்ளது.

அந்த வகையில் இந்தியா முழுவதும் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 118 கோடியே 19 லட்சமாக இருக்கிறது.

Loading...

ரிலையன்ஸ் ஜியோ வேகமாக வளர்ந்து வந்தாலும் 35.12 சதவீத சந்தை மதிப்புடன் வோடாஃபோன் ஐடியா இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ளது.

மெலும் பார்க்க:
First published: March 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...