புதிய திரைப்படம் வெளியாகும் அதே நேரத்தில் இனி வீட்டிலிருந்தே பார்க்கலாம்- அதிரடி அம்சங்களுடன் ஜியோ ஃபைபர்

வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப 700 ரூபாய் முதல் 10ஆயிரம் ரூபாய் வரையிலான அளவில் உள்ளன

புதிய திரைப்படம் வெளியாகும் அதே நேரத்தில் இனி வீட்டிலிருந்தே பார்க்கலாம்- அதிரடி அம்சங்களுடன் ஜியோ ஃபைபர்
ஜியோ வருடாந்திர மாநாடு
  • News18
  • Last Updated: August 12, 2019, 1:12 PM IST
  • Share this:
இந்தியாவில் ஒரு புதிய திரைப்படம் வெளியானால் அதே திரைப்படத்தை வீட்டிலிருந்தே உங்கள் ஜியோ ஃபைபர் மூலம் பார்க்கக்கூடிய வசதியை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

ஜியோ முதல் நாள் முதல் காட்சி என்கிற இத்திட்டம் வருகிற 2020-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. ஜியோ வழங்கும் ஜியோ ஃபைபர் தொழில்நுட்பம் மூலம் இந்த வசதிகள் சாத்தியப்படும்.

செப்டம்பர் 5-ம் தேதி முதல் ஜியோ ஃபைபர் அறிமுகம் ஆகிறது. 1,600 நகரங்களில் சுமார் 20 மில்லியன் இல்லங்களிலும் 15 மில்லியன் தொழில் நிறுவனங்களிடமும் ஜியோ ஃபைபர் சென்ற்டையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ ஃபைபர் மூலம் ப்ராட்பேண்ட்- லேண்ட்லைன் - டிவி ஆகியவற்றை ஒன்றாக இச்சேவை இணைக்கும்.


ஜியோ ஃபைபர் மூலம் இணைய சேவை, வாய்ஸ் கால் சேவை, முக்கிய திரைப்பட ஆன்லைன் தளங்களுக்கான சந்தா, ஷாப்பிங் என அனைத்துக்குமான ஒரே தளமாக ஜியோ ஃபைபர் இருக்கும். முதற்கட்டமாக ஆயுள்சந்தா செலுத்துவோருக்கு அதிரடி சலுகையாக 4k டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

செப்டம்பர் 5-ம் தேதி முதல் அறிமுகம் ஆக உள்ள ஜியோ ஃபைபர்-க்கான சந்தா விலை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப 700 ரூபாய் முதல் 10ஆயிரம் ரூபாய் வரையிலான அளவில் உள்ளன.

ஜியோ ஃபைபர் சலுகைகள்:1. இந்தியா முழுவதுக்குமான வாய்ஸ் கால் சேவை இலவசம்
2. சர்வதேச விலை நிர்ணய முறையில் 1/5 அல்லது 1/10 என்ற அளவிலேயே சர்வதேச கால்களுக்கு விலை நிர்ணயிக்கப்படும்.
3. முன்னணி OTT ப்ரீமியம் சேவைகள் இலவசம்
4. ஒரு திரைப்படம் வெளியாகும் புதிதாக வெளியாகும் அதே நேரத்தில் வீட்டிலிருந்தபடியே திரைப்படங்களைப் பார்க்க முடியும்.
5. வாடிக்கையாளர்களுக்கு ஆரம்பகட்ட சலுகையாக ஹெச்டி 4k டிவி மற்றும் செட் டாப் பாக்ஸ் இலவசம்
First published: August 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading