முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இனி ஸ்மார்ட் ஃபோன் கேமரா மூலம் டிவி-யிலிருந்து வீடியோ கால் - ஜியோ ஃபைபர் யூஸர்கள் மகிழ்ச்சி!

இனி ஸ்மார்ட் ஃபோன் கேமரா மூலம் டிவி-யிலிருந்து வீடியோ கால் - ஜியோ ஃபைபர் யூஸர்கள் மகிழ்ச்சி!

டிவி-யிலிருந்து வீடியோ கால்

டிவி-யிலிருந்து வீடியோ கால்

முதலில் இந்த app-ஐ டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் யூஸர்கள் தங்களது 10 இலக்க ஜியோ ஃபைபர் எண்ணை (லேண்ட்லைன் எண்) உள்ளமைக்கவும்.

மொபைல் நெட்வொர்க் உலகில் மிக பெரிய புரட்சியை ஏற்படுத்திய முகேஷ் அம்பானிக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது ஜியோ ஃபைபர் யூஸர்களுக்காக ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி ஜியோ ஃபைபர் யூஸர்கள் இப்போது வெளிப்புற கேமரா (external camera) அல்லது வெப்கேம் (webcam) இல்லாமல் தங்கள் ஸ்மார்ட் டிவி-க்களை பயன்படுத்தி இனி வீடியோ கால்ஸ் செய்து கொள்ளலாம். இந்த புதிய அம்சம் "camera on mobile" என்று அழைக்கப்படுகிறது.

இந்த அம்சமானது வீடியோ கால் மேற்கொள்ள தங்கள் ஸ்மார்ட் மொபைலின் கேமராவை, வெப் கேமராவாக பயன்படுத்த ஜியோ ஃபைபர் யூஸர்களுக்கு உதவுகிறது. இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் ஜியோஜாயின் ஆப் (JioJoin app) மூலம் கிடைக்கிறது. இது தங்கள் ஸ்மார்ட் ஃபோன் கேமராவை வீடியோ கால்ஸிற்கான இன்புட் டிவைஸாக யூஸர்களை மாற்ற அனுமதிக்கிறது. ஜியோ பிராட்பேண்ட் யூஸர்களுக்கு காலிங் சப்போர்ட்டை வழங்க ஜியோ ஃபைபர் சேவையுடன் கூடிய ஜியோ ஃபைபர் வாய்ஸ் மூலம் வீடியோ அழைப்பை இது செயல்படுத்துகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போது ஜியோ ஃபைபர் வாய்ஸ் யூஸர்களுக்கு தடையற்ற HD வீடியோ கால்கள், கான்ஃப்ரன்ஸ் கால்களை அவர்களின் பெரிய டிவி ஸ்கிரீனில் தனிப்பட்ட அனுபவத்தைப் பெற உதவுகிறது. யூஸர்கள் தங்கள் மொபைல் சாதனங்களில் JioJoin ஆப் மூலம் தங்கள் லேண்ட்லைன் எண்ணைப் பயன்படுத்தி வாய்ஸ் கால்களையும் மேற்கொள்ளலாம். 'camera on mobile' அம்சம் கடந்த சில மாதங்களாக சோதனையில் இருந்து வந்த நிலையில், தற்போது இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் யூஸர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Camera On Mobile அம்சத்தை ஜியோ ஃபைபர் யூஸர்கள் எவ்வாறு பயன்படுத்துவது?

இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் யூஸர்களுக்கு "JioJoin app"-ல் கிடைக்கிறது. முதலில் இந்த app-ஐ டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் யூஸர்கள் தங்களது 10 இலக்க ஜியோ ஃபைபர் எண்ணை (லேண்ட்லைன் எண்) உள்ளமைக்கவும். இது ஜியோ ஃபைபர் இணைப்பிற்கான துணை சாதனமாக யூசர்களின் ஸ்மார்ட் ஃபோன் இருக்க அனுமதிக்கும். இதன் மூலம் பிக் ஸ்கிரீன் டிவி காலிங் வசதியை அனுபவிக்க யூஸர்கள் தயாராகலாம். வழக்கமான லேண்ட்லைன் அனுபவத்துடன் ஒப்பிடும் போது தனித்துவமான வித்தியாசமான லேண்ட்லைன் காலிங் அனுபவத்தை ஜியோ ஃபைபர் வாய்ஸ் வழங்குகிறது.

மொபைல் கேமராவை பயன்படுத்தி ஸ்மார்ட் டிவி மூலம் வீடியோ கால்களை மேற்கொள்ள யூஸர்களுக்கு JioFiber Voice சிறப்பு மற்றும் புதுமை அம்சங்களை வழங்குகிறது. யூஸர்கள் தங்கள் ஜியோ ஃபைபர் எண்ணை கான்ஃபியூகர் செய்த பிறகு அவர்கள் JioJoin app செட்டிங்ஸ்களில் இருந்து "Camera on Mobile"அம்சத்தை எனேபிள் செய்து இயக்கி கொள்ளலாம்.

Also read... இந்தியாவில் கிடைக்க கூடிய சிறந்த மீடியா ஸ்ட்ரீமிங் சாதனங்களின் பட்டியல்!

மேலும் டிவி மூலம் வீடியோ கால்களை மேற்கொள்ள இப்போது யூஸர்கள் தங்களது ஸ்மார்ட் ஃபோனை வெப்கேமராவாக பயன்படுத்தலாம். 2.4GHz பேண்டில் ( 2.4GHz band) இந்த அம்சத்தை நீங்கள் அனுபவிக்கலாம் என்றாலும் சில பின்னடைவுகள் இருக்கலாம். எனவே சிறந்த தரம் மற்றும் தெளிவான வீடியோ கால்ஸ்களை பெற தங்கள் மோடம்களை 5GHz வைஃபை பேண்டிற்கு மாறுமாறு ஜியோ ஃபைபர் தனது யூஸர்களுக்கு பரிந்துரை செய்து உள்ளது.JioJoin app-ஐ ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இது சாதாரணமாக இயங்க குறைந்தபட்சம் ஆண்ட்ராய்டு 6.0 அல்லது iOS 10.0 -ல் சாதனங்கள் தேவை.

First published:

Tags: Jio Fiber, Video calls